மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

இதை எங்கோ கேட்ட மாதிரி இருக்குமே.. ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த “சங்கமம்” படத்தில் வரும் பாட்டின் ஆரம்பத்தில் வரும் ஆண்டாள் திருப்பாவை. பள்ளியில் தமிழ் பாடத்திலும் திருப்பாவை வந்திருக்கிறது. அர்த்தமும் சுவையும் தெரியாது விதியேன்னு மனப்பாடம் பண்ணி இருக்கிறேன். இன்று இதே பாடலை அதில் உள்ள காதல் சுவையுடன் படிக்கையில் சரவணபவன் ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி மனதை நிறைக்கிறது.
இதன் பொருள்
” மார்கழி மாதம் , ஆகாயம் நிறைந்த பௌர்ணமி நாளில், நீராட போகும் அழகிய ஆபரணங்கள் அணிந்த இளம்பெண்களே, செல்வம் மிகுந்த ஆயர்பாடி இளம்பெண்களே, கூர்மையான வேலால் பகைவர்க்கு கொடுந்துன்பம் இளைத்திடும் நந்தகோபனின் குமரனும், அழகிய கண்களுடைய யசோதையின் இளம் சிங்க குட்டி போன்ற மகனும், கரு மேக வண்ணம் கொண்டவனும், தாமரை இதழ் போல வெண்மையும் இளஞ்சிவப்பும் கொண்ட கண்களை உடையவனும், கதிர்மதியம் சூரியனை பிரகாசமாக ஒளிரும் நிலவை போன்ற முகத்தை கொண்டவனும் ஆகிய நாராயணன் நமக்கே நமக்கென்று அருள் தருவான். உலகத்தார் போற்றும் அவனை பாடிட வாருங்கள் எம் பாவைகளே”

எனக்கு தெரிந்த தமிழில் அர்த்தம் சொல்லி இருக்கிறேன்
அன்புடன்
லோககாந்தன்
0 comments:
Post a Comment