skip to main |
skip to sidebar
நீங்கள் குறும்படம் எடுக்க விரும்புகிறீர்களா? முதல் முயற்சி என்றால் என்ன செய்யவேண்டும் என்ற தயக்கம் இருக்கிறதா ..இதோ சில வழிமுறைகள் இணையத்தில் படித்தது . நானும் ஒரு மாணவன் தான் . கிடைத்த விசயத்தையும் என் அனுபவத்தையும் ,பகிர்கிறேன்.
1.நிறைய குறும்படங்களைப்பாருங்கள். டாக்குமெண்டரிகள் திரையிடப்படும் போது பெரிய திரையில் பாருங்கள். இல்லையெனில் வீடியோ கிடைத்தால் பாருங்கள்.குறும்படங்களின் வடிவங்கள் எப்படிப்பட்டது என்கிற மற்றும் அதன் எத்தனையோ வகை இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..

2.தொழிட்நுட்பத்தில் தேர்ந்திடப்பழகுங்கள். கடனோ உடனோ வாங்கி ஒரு கேமரா ஏற்பாடு செய்து அதன் தொழிட்நுட்பம் பழகுங்கள். எடிட்டிங் மற்றும் ஒலி அமைப்புகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று அதன் அதன் தொழிட்நுட்பத்தை அறிந்துகொள்ளுங்கள்.
3. ஒரு கருப்பொருளை எதைப்பற்றி எடுக்கபோகிறீர்கள் என்று முடிவெடுத்துவையுங்கள்.அது எடுக்க எளிதாக , பிடித்தமான ஒன்றாக இருக்கட்டும்.உங்கள் பகுதியில் இருப்பவரைப்பற்றியோ அல்லது வீட்டுக்கருகில் நடக்கும் நிகழ்ச்சியோ என்றால் அதிகம் பணச்செலவில்லாமல் மற்றும் அதிக நேரம் செலவு செய்து நிறைய முயற்சிக்கமுடியும்.
4. எடுத்துக்கொண்ட கருப்பொருளில் நிறைய ஆய்வு செய்து கொள்ளுங்கள்.இணையம் மற்றும் புத்தகங்களில் அதனைப்பற்றி குறிப்பிட்டு இருப்பதையும் உண்மையான விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
5 .ஒரு மொத்தமான வடிவமைப்பை வரைந்து கொள்ளுங்கள். கண்மூடி யோசியுங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள், என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களோ அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

6.என்ன என்ன தேவை என்பதை குறித்துக்கொள்ளுங்கள்..கேமிரா மற்றும் உபகரணங்கள், யாரை வைத்து எடுக்கப்போகிறோம் அவர்கள் நேரம் மற்றும் அனுமதி என்ற திட்டமிடல்
7.எடுப்பதற்கான பணத்தேவை களை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
8.படமெடுக்கத்தொடங்குங்கள். எடுக்கப்போவதை பற்றி பேசிக்கொண்டே இருக்காதீர்கள் , இந்த விசயம்தான் கனவுடன் நாளைய நம்பிக்கையோடிருக்கும் இயக்குனர்களுக்கும் உண்மையான இயக்குனர்களுக்கும் இருக்கும் வேறுபாடு.
9. படமெடுத்தபின் உள்ள வேலைகள். எந்த காட்சிகள் எப்படி எடிட் செய்யப்படவேண்டும் எது எந்த இடத்தில் வரவேண்டும்..என்கிற எழுதியதோ வரைந்ததோ ஒரு குறிப்பு.. தயார் செய்தால் வெட்டி ஒட்ட வசதியாக இருக்கும்..நேரம் மிச்சமாகும். பின்னர் முடிவான பார்வைக்கு தயார் செய்யவும்.
10. காட்சிப்படுத்துதல் என்பது முக்கியமான ஒன்று. ..சரியான இடத்தில் சரியான நபர்களுக்கு காட்சிப்படுத்துதல் குறும்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
அன்புடன்
K.லோககாந்தன்
0 comments:
Post a Comment