முக்கிய அறிவிப்பு தயவு செய்து அலட்சியப்படுத்தாமல் பகிருங்கள்

முக்கிய அறிவிப்பு தயவு செய்து அலட்சியப்படுத்தாமல் பகிருங்கள் 
________________________________________________________________

நாகப்பட்டினம்: களஞ்சியம் சமுதாய வானொலியிலிருந்து 
திரு. நகுவீர் பிரகாஷ் அவர்கள் மூலம் பெறப்பட்ட தகவல் 

திரு.நகுவீர் பிரகாஷ்: சுமத்ரா தீவிற்கருகில் மையப்பகுதியில் உணரப்பட்ட 8.9 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் என்பது சற்று ஆபத்தான கட்டமே இன்னும் ஒரு மணி நேரம் காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் [களஞ்சியம் சுனாமி எச்சரிக்கை மற்றும் சமுதாய வானொலி ] கடலோர மீனவர்களை அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி வருகிறோம்!

கார்த்திக் : ஆனால் இணையத்தில் விகடன் மூலம் அறியப்பட்ட தகவல் என்னவென்றால் கடல்சார் தகவல் மையம் சுனாமி எச்சரிக்கையை திறும்பப்பெற்றதாக தெரிவிக்கின்றதே?

நகுவீர் : அது பற்றி கருத்து இல்லை ஆனால் 8.9 ரிக்டர் என்பது ஆபத்தான கட்டமே! நாங்கள் கடற்கரையோரம் அமைந்துல்ல எங்கள் வானொலி நிலையத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தோம், ஆகையால் தயவு செய்து அஜாக்கிரதையாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும்

கார்த்திக் : கண்டிப்பாக செய்துவிடுகிறேன்

நகுவீர் : கடந்த முறை சுமத்ராவில் ஏற்பட்ட அதிர்வைப்போலவே இம்முறை மையப்பகுதில் கீழ்ப்பகுதியில்ல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
இங்குள்ள மீனவர்கள் கூட கொஞ்சம் பொருட்படுத்தாமலே இருக்கிறார்கள் நாங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வலியுறித்தியே வருகிறோம்!

**************************************************************
மீனவர்களோ கடற்கரையோரவாசிகளோ இணையம் பாவிக்கக்கூடிய சூல்நிலையில் இருப்பார்களா எனத் தெரியது ஆனாலும் இயற்கை சீற்றத்தில் அறியாமையால் அழிந்த மக்கள் உதாசீணத்தால் அழியக்காரணமாகிடக்கூடாது முடிந்த வரை உங்களுக்கு தெரிந்த நபர்களை உஷார் நிலைப்படுத்துங்கள்...

இன்னும் சில மணி நேரம் கழித்து என்ன ஆகும் என எண்ணிக்கொண்டிருப்பதை விட செயல் மிக முக்கியம்! நன்றி 

1 comments:

s.jathurshan said...

நல்லதொரு முயற்சி..... மக்களை தெளிவு படுத்த வேண்டியது கட்டாயம்..... பாராட்டுக்கள்....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles