எழுத்தாணி பற்றிய அறிமுகம்
தலைப்பு – எழுத்தாணி
கதை சுருக்கம் - கல்லூரி மாணவர்களிடையே பிளாஸ்டிக் பேனாக்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவான கரு. அதற்கு திரைக்கதை அமைத்து தயாரித்துள்ளோம். இதற்கு து}ண்டுதலாய் அமைந்தது அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதித்து ஏற்படுத்திய சட்டம். பெரிய பிளாஸ்டிக் பொருட்களைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள், ஆனால் அப்படி மேடை போட்டு பேசுபவர்களின் சட்டைப் பைகளிலும் பிளாஸ்டிக் பேனாக்களையே காணமுடிகிறது. முதலாவதாக மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த குறும்படத்தைத் தயாரித்தோம். எமது கல்லூரியிலிருந்து இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றியுடையவர்களாய் இருக்கிறோம்.
தயாரிப்பு – Error Visuals
நடிப்பு – மதன்ராஜ் மற்றும் கல்லூரி நண்பர்கள்
இடம் - மதுரை அமெரிக்கன் கல்லூரி
ஒளிப்பதிவு – அமலன் ஸ்டலோன் (மதுரை)
கதை – உதயசங்கர் (யாழ்ப்பாணம்)
எழுத்து, இயக்கம் - கிறேசன் பிரசாந் (மட்டக்களப்பு)
விருது – மதுரை மருத்துவக் கல்லூரியால் தமிழ்நாடு அளவில் நடத்தப்பட்ட குறும்படப்போட்டியில் சிறந்த 5 குறும்படங்களுள் ஒன்றாக தொpந்தெடுக்கப்பட்டது. (நாள் 12-10-2012)
என்னைப் பற்றி – நான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டவன். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கணணி பிரிவில் இறுதியாண்டு கற்று வருகிறேன். பொழுதுபோக்காக குறும்பட இயக்கத்தை ஆரம்பித்தேன். “எழுத்தாணி” என்னுடைய முதலாவது குறும்படம். தற்பொழுது “11ஆம் அத்தியாயம்” என்னும் குறும்படத்தை இயக்கிவருகிறேன்.
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இப்பாடல் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................