திருகோணமலை இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தயாரித்துள்ள "தி கேம்"எனும் குறும்படத்தின் வெளியீடு இசை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 16.03.2013 சனிக்கிழமை மாலை 04.30மனிக்கு உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலை கூடத்தில் நடை பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் விசேட அம்சமாக திருகோணமலையில் வளர்ந்து வரும் சொல்லிசை கலைஞர்களின் இசை நிகழ்வும் நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராக பிரபல பின்னணி பாடகர் கிரிஷான் மகேசன் மற்றும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை சொல்லிசை கலைஞர் ராம் அகராதி கனடாவில் இருந்து கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சியில் திருகோணமலையின் புதிய தலைமுறை இசைக் குழுக்களான Heart Breakers Entertainment, Trinco Swaggers, The Future World இவர்களது சொந்த படைப்புகளை வழங்கவுள்ளனர். இவர்களுடன் ஸ்வரம்ஸ் குழுவினரின் இசைக் கச்சேரியும் இடம் பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்பதுடன் அனைத்து கலை ஆர்வலர்களையும் கலந்து சிறப்பித்து ஆதரவு வழங்குமாறு அன்பாக வேண்டிகொள்கின்றனர்.
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................