கற்கால சாதி காதலுக்கு இல்லை என்று














காதலும் காற்றும் அதிகமாய் இன்னும் மாசுபடாமல் இருப்பது கிராமங்களிலே தான். அந்த கிராமத்து காதலை அந்த மண்ணின் வார்த்தைகளிலேயே மலர்த்துகின்றார் கவிஞர். இந்த கவிதையில் ஈரமிருக்கிறது, யதார்தம் இருக்கிறது, ஆடம்பர கற்பனைகளால் கவிதை கனமகிவிடக் கூடாது என்ற கவனம் தெரிகிறது. நாட்டுபுறப் பாட்டுக்கு அதன் போக்கிலேயே ஒரு அழகுண்டு. அதற்கு அலங்காரமும் இல்லை அதனால் அதற்கு அகங்காரமும் இல்லை. ஏற்கனவே வெற்றிலை பாக்கு போட்டு செக்க சிவந்த உதடு அது அதற்கெதுக்கு LIPSTICK ஏற்கவனே மருதாணி அப்பிக் கொண்ட நகம் அது அதற்கெதுக்கு NAIL POLISH. இந்த கவிதையில் இரண்டு புதுமைகள் இருக்கின்றன. படைத்தவன் பெயர் தெரியாத பாட்டுதான் நாட்டுப்பாட்டு. "நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ" என்று கவிஞரே எழுதியிருக்கின்றார். அனால் இந்த பாட்டிற்கு அவரே தாயுமானவர் அவரே தந்தையுமானவர். இதில் இன்னொரு புதுமையும் இருக்கிறது. சித்தர்கள் துறவுக்கு மட்டுமே பயன்படுத்திய ஒரு இலக்கிய வடிவத்தை கவிஞர் காதலுக்கு பயன்படுத்தியிருக்கின்றார். ஆலமரம், ஆத்தோரப்படுகை, மொத்தப் பனை, சத்தமிடும் சந்தை, கருவேலம் காடு, கத்தாளாம் கரடு, ஒரு கிராமத்தில் இவையெல்லாம் காதலுக்கான களங்கள். மிக வேகமாக மாறிவரும் மின்னணு யுகத்தில் அடுத்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்த களங்கள் எல்லாம் கானமற்போய்விட கூடும். அப்போது இறந்த காலத்தின் பூகோளத்தையும், வாழ்க்கை முறைகளையும் இந்த கவிதைகள் என்ற கண்ணாடி வழியே தான் தர்சிக்க முடியும்.












 இதோ மண்ணின் மணம் மாறாத ஒரு மல்லிகை கவிதை................. பேரீச்சம் பழம் போல பெரிய உதடுக்காரி வெக்கத்தை ஒத்தி வைச்சு விருந்து வைப்பது எக்காலம்.................. ஆத்தங்கரையோரம் ஆலமரம் அடையாளம் ஆலமரத்தடியில் அள்ளுவது எக்காலம்................. ஓடையில நீ துவைக்க உன்னை வந்து நான் துவைக்க சாடையில நீ அழைக்க தழுவுவது எக்காலம்................ ஊருக்கு தெற்க ஒற்றை பனையோரம் யாருக்கும் தெரியாமல் அணைப்பதுவும் எக்காலம்................ சத்தமிடும் சந்தையில சனங்களுக்கு மத்தியில பேசாமல் பேசி பிரிவதுவும் எக்காலம்................ மூட்டை முடிச்சோட முளிசபடி நீயிருக்க தூக்கி விடும் சாக்கில் நான் தொடுவதுவும் எக்காலம்................. பின்னாடி நான் வந்து பேசாமல் கையெடுக்க கண்ணாடி வளையல் கைகிளிப்பது எக்காலம்................. பாலற்றைக் கடக்கையில பாவாடை நீ சுருட்ட முழங்காலை நான் பார்த்து முத்தி பெறுவது எக்காலம்................... அந்தி மாசங்க விட்டு ஆத்தாளை உறங்க விட்டு கொலுசுத் சத்தம் என்னை கூப்பிடுவது எக்காலம்................. கள்ளூறும் சோலையிலே கனத்த மழை வேளையிலே உள்ளூர் கிளியோடு ஒதுங்குவது எக்காலம்................ காகம் கரையாத கருவேலங் காட்டுக்குள் மோகம் தலைகேற மூச்சரிப்பது எக்காலம்................ பள்ளமிட்ட ஆத்தோர படுகையிலே நீ வந்து வெல்லமிட்ட பச்சரிசி விருந்து வைப்பது எக்காலம்.................. ஆத்தோர நாணல் அதன் போக்கில் சாய்வது போல் சரசத்தில் நீ மெல்ல சாய்வதுவும் எக்காலம்................... கத்தாளங் காட்டு காடைகளும் அறியாமல் மத்தாளங் கொட்டி மகிழ்வதுவும் எக்காலம்.................. சக்கம்பட்டி சேலை சாயம் போகும் மட்டும் முத்தமிட்டு கண்கள் மூடுவதும் எக்காலம்.................. ஆற்று தடம் பார்த்தே அடையாளம் சொல்லுவன்டி மற்ற தடம் பார்த்து மயங்குவது எக்காலம்................ மேலைத் தெரு உன்தெரு கீழைத் தெரு என்தெரு தெருவோடு பேதங்கள் தீருவது எக்காலம்.................. கற்கால சாதி காதலுக்கு இல்லை என்று எக்காலம் விட்டு !, இணைவதுவும் எக்காலம்.................. சாதி சுடுகாடு தள்ளி வைச்ச சாதிசனம் சாதிக்கே சுடுகாடு தந்து வைப்பது எக்காலம்.................




அன்புடன் K.லோககாந்தன்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles