பனி இல்லாத மார்கழியா



பனி இல்லாத மார்கழியா 
படை இல்லாத மன்னவனா 
இனிப்பில்லாத முக்கனியா 
இசை இல்லாத முத்தமிழா

அழகில்லாத ஓவியமா 
ஆசை இல்லாத பெண் மனமா 
மழை இல்லாத மாநிலமா
மலரில்லாத பூங்கொடியா 

தலைவன் இல்லாத காவியமா 
தலைவி இல்லாத காரியமா 
கலை இல்லாத நாடகமா 
காதல் இல்லாத வாலிபமா

நிலை இல்லாமல் ஓடுவதும் 
நினைவில்லாமல் பாடுவதும் 
பகைவர் போலே பேசுவதும் 
பருவம் செய்யும் கதை அல்லவா





அன்புடன் K.லோககாந்தன்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles