ஈழத்து தமிழ் சினிமா.. எந்தளவுக்கு சாத்தியம்

திரைப்படம் - ஈழத்து பொன்மணி

ஒரு உன்னதமான கலைப்படைப்பாக ஆரம்பமாகி காலச்சுழற்சியில் வர்த்தகத்தையும் தன்னுள் உள்வாங்கி வளர்ந்துவரும் கலைச்சாதனம் சினிமா. உலகின் அனைத்து கலைகளையும் தன்னுள் அடக்கிய ஒரு கலைக்கோர்வை.அதிகளவு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டுள்ள அற்புதமான படைப்பு
அந்தவகையில் இபோது தமிழ் சினிமா என்பது தென் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் முன்னொரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள் வெளிவந்தபோதும் இப்போது முற்றுமுழுதாக இல்லை என்று சொல்லக்கூடியளவுக்கு பின் தங்கிவிட்டது.  பின் தங்கிவிட்டது என்றால் இன்னமும் ஆரம்ப புள்ளியை தாண்டி வரவில்லை என்றே கொள்ளலாம்.



திரைப்படம் - ஈழத்து பொன்மணி

இப்போது ஈழ்த்து தமிழ்சினிமாவை மீளக்கட்டியெளுப்பவேண்டிய தேவை ஒன்று அவசியமாகியுள்ள அதேவேளை அதற்கான சாத்தியப்பாடுகளும் தற்போது மிக மிக குறைவாகவே உள்ளன. 

விடயத்திற்கு செல்வதற்கு முன்னர் ஈழத்து தமிழ்சினிமா வரலாற்றை சுருக்கமாக கூறினால் உசிதமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஈழத்து தமிழ்சினிமாவின் ஆரம்பத்தை சரியாக அறிய முடியவில்லை. தேடி அறிந்துகொண்டபடி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த ”குசுமலதா” என்ற திரைப்படமே ஈழத்தில் வெளியான முதல் தமிழ்ப்படமாக உள்ளது. இருந்த போதிலும் இந்த திரைப்படத்தை தயாரித்தவர் ஒரு சிங்களமொழி தயாரிப்பாளர். அதுவும் நேரடியான தமிழ் படமாக இல்லாமல் ”சங்கவுனு பிலிதுற” என்ற சிங்கள மொழிப்படத்தை டப் செய்தே வெளியிடப்பட்டிருந்தது. 

1982 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரை 27-29 திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. அதற்கு பின்னர் வந்த காலங்களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய சரியான விபரத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அக்காலப்பகுதியில் நேரடித் தயாரிப்பான தமிழ்ப்படங்கள், சிங்கள மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள், இந்தியக் கலைஞர்களினால் இலங்கையில் எடுக்கப்பட்ட படங்கள் என்ற வகைக்குள் அடங்கும் திரைப்படங்கள் ஈழத்து சினிமாத்துறையை அலங்கரித்திருந்தன. அதற்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் ஈழத்தை போர்மேகங்கள் சூழ்ந்திருந்தவேளை சினிமாவின் வரவு குறைந்து, காலப்போக்கில் முற்றாகவே நின்றுவிட்டது எனலாம்.



0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles