
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த மணிஷா யாதவ் அறிமுகம் ஆகியுள்ளார். முதல் படத்திலேயே அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திரும்ப வைத்த அவர், ராசியான நடிகை என்ற பெயர் எடுத்து விட்டார். அடுத்து சுசீந்தரன் இயக்கத்தில் ஒரு படம், மற்றொரு தமிழ்படம் என்று ஒப்பந்தம் ஆகியுள்ள அவர், தமன்னாவை தனது ரோல் மாடலாக கருதியுள்ளாராம்.
இது குறித்து மணிஷா அளித்துள்ள பேட்டியில், தமிழ் சினிமாவில் தமன்னா எனது வழிகாட்டி, கல்லூரி படத்தில் அவர் நடித்ததை போல நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. தமன்னாவைப் போலவே நானும் வருவேன், என்று கூறியிருக்கிறார் தன்னம்பிக்கையுடன். தமன்னாவை பின்பற்றி நானும் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபிப்பேன் என்று கூறியிருக்கும் அம்மணி தமிழை தமிழ் போலவே பேசுவதற்காக ஒரு வாத்தியாரைப் போட்டு தமிழ் கற்க முடிவெடுத்துள்ளாராம்.
0 comments:
Post a Comment