தென் இந்திய தமிழ் சினிமாவில் இலங்கையின் முதல் பெண்பாடலாசிரியர் (வீடியோ இணைப்பு)

தென் இந்திய தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை "இனியவளே" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக அறிமுகமானார்.

தற்போது இலங்கையின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் கவிக்குயில் "பாமினி "அவர்கள் தென் இந்திய தமிழ் சினிமாவில் இலங்கையின் முதல் பெண்பாடலாசிரியராக இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையில் வெளிவர இருக்கும் "சதா"  திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் .

அடுத்த திரைப்படமாக டெல்லி கணேஸ் இன் மகன் அறிமுகமாகும் " சிந்தை மயங்குதடி "என்ற திரைப்படத்தில் இவரது பாடல்கள் இடம்பெறுவதற்க்கான பேச்சு வார்த்தை இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதே நேரம் இவரது பாடல் வரிகளிலும் இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையிலும் திப்பு, ஹரிச்சரண், சிறினீவாஸ் , பிரியா, சுவேதா மோகன் ,சத்யன், ஹரிணி ,மது பாலகிருஸ்னன், உசாராஜ், முகேஸ்.ஆகியோர் குரலிலும் மிகப் பிரமாண்டமான வெளியீடாக யூன் மாதம் வெளிவர இருக்கின்றது என் காதல் நீ என்ற இசைப் பேழை

பல இசைப்பேழைகளையும், இணையத் தளங்கள் ஊடகவும் கவிதைகள் மூலம் பிரபலமடைந்த எஸ்வீஆர் பாமினி அவரது தென் இந்திய தமிழ் சினிமாவின் வருகைக்கு இணையத்தளங்களும் அவரது திறமையும் காரணம் என தென் இந்திய இசையமைப்பாளர் ரவிப்பிரியன் தெரிவித்துள்ளார்.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles