"ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P. பரமேஷ் அவர்கள் இசையில் புதிய பாடல்கள்

பரமேஷ் அவர்களும் அவர் மகள் இலங்கையின் முதல் பெண் இசை அமைப்பாளர் பிரபாலினியும்   
JAFFNAFILM.COM
YARLCNN.COM
"ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P. பரமேஷ் அவர்கள் 
இசையில் புதிய பாடல்கள் 

இலங்கையில் முதல் தமிழிசைதட்டை இயற்றி இசையமைத்து பாடி ஈழத்தமிழருக்கும் சொந்த பாடல்களை தயாரிக்க தெரியும் என்று 1968ம் ஆண்டில் நிரூபித்த "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P. பரமேஷ் அவர்களின் புதிய 2 பாடல்களை இணையதளங்களில் பெருமையுடன் வெளி யிடுகிறோம். 





"உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது" என்ற பாடலை மறக்க முடியுமா?

இந்த பாடலை தனது அன்றைய காதலி மாலினிக்காக இயற்றி இசையமைத்து பாடினார்.
மாலினி மற்றும் M.P.பரமேஷ் அவர்களின் 25 வருடகால திருமண வாழ்க்கை 21.06.2000இல் இறைவனால் பிரிக்கப்பட்டது. 



மாலினி அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவர்கள் இருவரும் இலங்கைதமிழ்
இசைக்காதலர்களாக, 
இசைக்கலைஞர்களாகவே வாழ்ந்து காட்டியவர்கள். 
இன்றும் தனது மனைவி நினைவில் பல அருமையான காதல் பாடல்களையும் ஜனரஞ்சகமான பல்வேறு பாடல்களையும் உருவாக்கி வரும் இந்த மூத்த 
ஈழத்து கலைஞர் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். 
1968இல் முதன் முதல் இலங்கையில் தமிழிசைதட்டு இயற்றி இசையமைத்து வெழிகொண்டு வந்து 
இலங்கை தமிழருக்கே பெருமை சேர்த்த வகையில் இசையமைப்பாளர் (music director)
M.P.பரமேஷ் அவர்களுக்கு நாடக தந்தை நவாலியூர் "கலையரசு" சொர்ணலிங்கம் அவர்களால் 
"ஈழத்து மெல்லிசை மன்னர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. மற்றும் M.P.பரமேஷ் அவர்களின் தம்பி M.P.கோனேஷ் (வாத்திய ஒருங்கமைப்பாளர் - orchastrator) மற்றும் காலம் சென்ற மகேஷ் (தயாரிப்பாளர் - producer) இவர்களுக்கும் இந்த கெளரவம் கிடைத்தது குறிப்பிடதக்கது. 

அன்று ஈழத்தில் எந்த வசதிகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில், சொந்த முயற்சியால் 
சாதனை படைத்த இந்த கலைஞர் பல பாடல்களை புலம் பெயர்ந்து வாழும் மண்ணிலும் இடைவிடாது உருவாக்கி வருகிறார். இவற்றில் "சங்கீத சாம்ராஜ்யம்" குறும்தட்டு குறிப்பிடத்தக்கது. 
புலம்பெயர்ந்த நாட்டிலும் தனது கலைபாதையில் சென்று 
எப்படி தான் இலங்கையில் சாதனை படைத்தாரோ அதேவகையில் தனது மூத்த பெண்குழந்தையை
இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்று உருவாக்கியவர்கள் இந்த பெற்றோர். 
இவர் மகள் "ஈழத்து மெல்லிசை குயில்" பிரபாலினி  


பிரபாகரன் இன்று பல பாடல்களை இசையமைத்து வருவது 
பெருமைக்குரிய விடயம்.
www.prabalini.com
இன்று வெழியிடப்படும் "காத்தடிக்குது புசலடிக்குது" மற்றும் "மாம்பழம் சாப்பிடுவோம்" என்ற இந்த இரண்டு பாடல்களையும் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P. பரமேஷ் அவர்கள் இயற்றி, இசையமைத்து, தயாரித்து பாடியுள்ளார். 
விரைவில் காணொளியுடன் கண்டு மகிழலாம்.

Song: Mampalam Saappiduvom 
http://soundcloud.com/logakanthan-kanthasamy/mambalam-final
Song: Kathadikkuthu Pusaladikuthu
lyrics, music, vocal and produced by 
“eelathu Mellissai Mannar “ M.P.Paramesh 




0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles