இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் "ஈழத்து மெல்லிசை குயில்" பிரபாலினி பிரபாகரன்
JAFFNAFIL.COM AND YARLMOVIE.COM

பிரபாலினி பிரபாகரன், இலங்கையில் பிறந்து சிறு வயதில் புலம்பெயர்ந்து ஜெர்மனி நாட்டில் தஞ்சம் அடைந்த
இலங்கை தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் பெண். பாடகிகள் கவிஞர்கள் என்று பல இலங்கை பெண்கள்
அன்றும் இன்றும் நம் மத்தியில்
இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் இசையமைப்பாளர் இலங்கையில் இல்லாத குறையை தீர்த்து வைத்து நம் எல்லோருக்கும் பெருமை
வாங்கி தரும் இவர் ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு.
இலங்கையின் முதல் தமிழ் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி இசைத்தட்டுவடிவில் வெழியிட்ட பெருமைக்குரியவர்
பழம் பெரும் கலைஞர் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ். இந்த பாடலை அன்று தனது காதலி மாலினி பரமேஷுக்காக வெழியிட்டார் M.P.பரமேஷ் அவர்கள்.
2000ம் ஆண்டில் காலம் சென்ற திருமதி மாலினி பரமேஷ் அவர்கள், இந்தியா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு "சங்கீத பூஷணம்"என்பது குறிப்பிடத்தக்கது.
என் தாயும் தந்தையுமே எனது முன்னோடிகள் அவர்களே சகலதிற்கும்
மூலகாரணம் என்று கூறுகிறார் பிரபாலினி !
தனது தாய் தந்தை வழியில் பிரபாலினி 5 வயதிலிருந்து
இலங்கை மேடைகளில் பாட தொடங்கினார். பல மேடைகல் சின்ன வயதில் கண்ட அனுபவமோ என்னவோ மேடை
தான் இவருக்கு பிடித்த விழையாட்டு களம் ஆனது.
சிறு வயதில் பாடி மட்டும் வந்த பிரபாலினி 13 வயதில் " கண்ணிலே தெரிந்த மின்னல்" என்ற தனது முதலாவது பாடலை எழுதி இசையமைத்தவர். இதை கண்ட இவரது தாய் தந்தையர்
படிப்பில் மட்டும் இவருக்கு ஊக்கம் அழிக்காமல் இசையையும் மேலும் ஊட்டி வளர்த்தனர். 1995ம் ஆண்டு தந்தை "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ் அவரும் தாயார் "சங்கீத பூஷணம்"
மாலினி பரமேஷ் அவர்களும் வெழியிட்ட "சங்கீத சாம்ராஜ்யம்" என்ற குறும்தட்டில் (CD) பிரபாலினியின் சொந்த பாடல்களையும் வெழியிட்டனர்.
இந்த பாடல்களே ஒரு இலங்கை தமிழ் மகள்
இசையமைத்த முதலாவது பாடல்களாக உருவெடுத்தன.
இந்த வெற்றிக்கு பின் பிரபாலினி "ஈழத்து மெல்லிசை குயில்" என்ற பட்டத்தை தமிழ்மன்றத்தால்
ஸ்ரீபதி சிவனடியார் வழங்க பெற்றார்.
தொடந்து பல மேடைகளில் பாடி வந்த பிரபாலினி ஒரு இசைகளைஞரையே காதலித்து திருமணமாகி
இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் பிரபாகரன் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர்,
மற்றும் தபலா, கிற்றார் கருவிகள் இசைக்க தெரிந்தவர். பிரபாலினியை திருமணதிற்கு பின்னும் அவரது இசைத்துறையில்
பணிபுரிய முழு ஒத்துழைப்பையும் கொடுப்பவர்.
பிரபாலினி, தனது படிப்பை விடாமல் வெற்றிகரமாக நிறைவு செய்த ஒரு பட்டதாரி என்பது இன்றைய இளம் கலைஞர்கள்
தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம்.
11 வயதில் புலம் பெயர்ந்து ஜேர்மனி சென்றும் சுத்தமாக தமிழ் பேச, எழுத தெரிந்தவர பிரபாலினி. தனது தமிழ் மொழியின் பற்றால்
மேலும் மேலும் தந்தை தாயாரிடம் படித்து ஜெர்மனியில் அரசால் அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் இந்த பெண்.
இன்று குடும்பம் மற்றும் இசை என்பதை மட்டும் கவனித்து வருகிறார்.
பிரபாலினி இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்தும் அவரது லட்சியத்தில் சரியான பாதையில்
செல்கிறார் என்பது பாராட்ட வேண்டிய விடயம்.
இந்தியா தமிழ் சினிமாவில் இசையமைக்கும் வாய்புகள் கிட்டியும்,
அந்த தருணங்களில் தாய்மை அடைந்திருத்த காரணத்தால், அந்த
வாய்ப்புகளை ஏற்றுகொள்ள முடியாமல் போனது என்பது கொஞ்சம் மனவருத்தம் தான்
இவருக்கு. ஆனால் இன்று குறும்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பாடல்களை உருவாக்கிவருகிறார்.
ஒரு பெண்ணாக எதனை பொறுப்புகள் இருந்தாலும். தனது மனதிற்கு பிடித்த வாழ்க்கையில் இசையை ஒரு பொழுது போக்காக
நினைக்காமல், முழு முயற்சியுடன் ஈடுபட்டுவரும் பிரபாலினியால் எங்கள் தமிழ் இன பெண்களுக்கு பெருமைதான்.
இவர் ஒரு பாடகி, கவிஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், அறிவிப்பாளர் குறும் பட இயக்குனர் என்று பல
துறைகளில் ஈடுபட்டு வரும் ஒரு இலங்கை தமிழ் மகள்.
அவரது படைப்புகளில் சிலதை www.prabalini.comஇல் காணலாம்.
வாழ்க வெற்றியுடன்
www.prabalini.com
http://www.prabalini.com
0 comments:
Post a Comment