"December-3" குறும்படம் TRAILER (வீடியோ இணைப்பு )

யாழ் மண்ணில் முதன் முறையாக Maya,3D தொழில்நுட்பத்தினை பரீட்சார்த்தமாக சிறியளவில் பயன்படுத்தி வெளிவரவிருக்கும் ஒரு குறும்திரைப்படம்தான் December-3 ஆகும்

. இத் திரைப்படத்தின் கதை களமானது கடந்த காலங்களில் இடம்பெற்ற போரில் தனது இரண்டு கால்களினையும் இழந்த நிலையில் வாழ்வினை நகர்த்துவதற்கு போராடும் ஒரு இளம் பெண்ணினது உணர்வினையும் அப் பெண்ணை பெற்ற தந்தையின் நிலையினையும், போரின் எச்சங்களான மிதிவெடியினை அகற்றவரும் வாகனசாரதிக்கும் அப் பெண்ணிற்கு ஏற்படும் 
மென்மையான காதல் உணர்வினையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

 கன்னிவெடிகள் அகற்றும் பணிக்காக Robo என்னும் புதிய பாத்திரப்படைப்பினை இயக்குனர் புகுத்தியுள்ளமை புதிய பரிமாணத்தினுள் குறும்படத்தயாரிப்பானது பயணிக்கின்றது. Roboவின் காட்சிகளினை  வடிவமைப்பதற்கு  Maya,3Dதொழில்நுட்ப உத்திகளினையும் பயன்படுத்தியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Maya,3D தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி யாழ் மண்ணில் எதிர்காலத்தில் வெளிவரவிருக்கின்ற திரைப்படங்கள், குறும்திரைப்படங்கள் மற்றும் இசை அல்பங்கள் போன்றவற்றிற்கு இத்திரைப்படம் முன்னோடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
December-3 குறும்திரைப்படதிற்கான Editing and Visual Effects முதலான தொழில்நுட்ப உத்திகளினை யாழ் மண்ணில் முதன் முறையாக  Maya தொழில்நுட்ப உத்திகளினை மேற்கொள்வதற்கென நிறுவப்பட்ட கணனி வரைகலைக்கலையகம் ( Maya Dot Vfx) மேற்கொண்டுள்ளது.
இத்திரைப்படத்தினை தாயாரித்தவர் சத்திய மென்டிஸ். இதற்கான படத்தொகுப்பு மற்றும் CG worksஆனது S.T.சிவநேசனால் (Maya Dot Vfx )செய்யப்பட்டுள்ளது. இசைப்பிரியன் இக்குறும்திரைப்படத்திற்கான இசையினை இசையமைத்துள்ளார். தர்சிகாஇ கபிலன் ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் மற்றும் பல கலைஞர்களும் இக் குறும்திரைப்படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles