ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்களுக்கு அமெரிக்காவில் பாராட்டு
ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் அவர்கள் இலங்கையின் தலை சிறந்த மூத்த இசைக்கலைஞர் .
இவரின் 45 வருட கால கலைப்பணியை பாராட்டி அமெரிக்காவில் "இலங்கை தமிழ் சங்கம்" dallas கடந்த
08-12-2012 ம் திகதியன்று பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துமடல் வழங்கியும், மலர்கொத்து வழங்கியும் கௌரவித்தது.
M.P.பரமேஷ் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு கூடி இருந்த தமிழ் மக்களிடம் பேசினார்.
பின்னர் அவரது அடையாள சின்னமான இலங்கையின் முதல் முதல் இசைதட்டில் வெளிவந்த
"உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது" பாடலை பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்.
அவர் விரைவில் வெளியிட இருக்கும் சில பாடல்களையும் பாடி காட்டி எல்லோரையும் மகிழ்வித்தார்.
தனது பேச்சில் அவர் சொன்ன வரிகள் எல்லோரினதும் கைதட்டலை பெற்றது.
அவர் பேசியதில் சில: இன்று எனக்கு பொன்னாடை போற்றுகிறீர்கள் என்று நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, அதே சமயம்
என்னும் எத்தனையோ ஈழத்து மூத்த கலைஞர்களுக்கு இந்த கௌரவம் கிடைக்கவில்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் கஷ்டடமாக இருக்கிறது என்று சொன்னார்.
உண்மைதான்! கலைஞர்கள் வாழும் போதே பாராட்டப்பட வேண்டுயவர்கள்.
எங்கள் கலைஞர்களை நாம் பாராட்டாமல் தவிர்த்தல் யார் செய்வார்.
எங்கள் ஈழத்தமிழ் மகன் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ் அவர்கள்
அன்றும் இன்றும் என்றும் இசையுடன் வாழ்கிறார், வாழ்வார் என்பதற்கு அவர் தொடர்ந்து செய்து வரும் பாடல்களும்
விரைவில் வெளிவரும் இசைத்தட்டுமே உதாரணம்.
வாழ்க பல்லாண்டு
படத்தில்
இலங்கை தமிழ் சங்க உறுப்பினர்கள்.
தலைவி திருமதி.கௌஷி சபேஷன், துணைதலைவர் பிரேன் மகேந்திரன், செயலாளர் செயந்தகுமார் அவர்களுடன்
தமிழ் சங்கத்தை உருவாகியவர்களில் ஒருவரான திரு. ரஞ்சன் அவர்களுடன் "ஈழத்து மெல்லிசை மன்னர்" M.P.பரமேஷ்.
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................