மார்கழி மாதம் மானுடர் வாழும் பூழி அழியாது பாடல் video

எதிர்வரும் 21ம் திகதியுடன் உலகம் அழியும் என அண்மைக்காலமாக பரவிவரும் தகவல் பலவிதமான மாற்றங்களை விதைத்திருக்கின்றது. அலுவலகங்களிலும் வழமையான அரட்டைகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் விடயம் பூமியின் அழிவு.

இந்த விடயம் எமது இளம் தலைமுறை இசைக்கலைஞர்களையும் பாதித்ததன் விளைவாக பூமித்தாயே என பாடல் ஒன்றை உருவாக்கி அதற்கு காட்சியமைப்பும் செய்திருக்கின்றார்கள்.

 ஜஸ்வர்யனின் தயாரிப்பாக திணேஸ் ஏகாம்பரம் மற்றும் அருணா கேதீஸ் ஆகியோரின் எழுத்துருவில் உருவாகியிருக்கும் இப்பாடல் உமா சதீஸின் காணொளிப்பதிவில் அற்புதமான கலைப்படைப்பாக உருவாகியிருக்கின்றது.

எல்லோரும் ப10மியின் அழிவை எதிர்பார்த்திருக்கும் கணத்தில் மார்கழி மாதம் மானுடர் வாழும் பூமி அழியாது என நம்பிக்கை விதையை விதைப்பதாக இப் பாடல் அமைந்திருக்கின்றது.

தென்னிந்திய இசையமைப்பாளர் அக்னி அவர்களின் மெல்லிசைக்கு நமது தேசத்தின் இளம்பாடகர் மது தன் குரலால் இனிமை சேர்த்திருக்கின்றார்.

வயற்பரப்புக்களையும் அருவிகளையும் வானுயர் கோபுரங்களையும் தேவாலயங் களையும் முன்னிறுத்தி எம்மை வாழவைத்த பூமித்தாய் அழிந்துவிடக்கூடாது என்ற பாசத்தின் ஏக்கமாக பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.

 “நீ அழியலாம் நான் அழியலாம் உலகம் அழியாது” என்ற பாடல் வரிகள் அற்புதமான கவித்துவ வளம் சேர்ப்பதாகவுள்ளது. எமது மண்ணின் கலைஞர்கள் முன்னெடுக்கும் இத்தகைய கலைத்துவ முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்களை தெரிவிப்பது அவர்களுக்கு ஊக்க மருந்துகளாக அமையும்.

இணையத் தளங்கள் மற்றும் முகநூல் பதிவுகள் மற்றும் youtube இப் பாடலின் காணொளியைக் காணலாம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles