நீங்கள் ஒரு ஈழக் கலைஞரா?இதோ உங்களுக்கான அரியவாய்ப்பு

ஒளிக்கீற்று திரை இசைப்பாடற்போட்டி நிகழ்ச்சி புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் கலைப் படைப்பாற்றலுக்கு களம் அமைப்பதற்காக 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. TTN தொலைக்காட்சியில் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பான திரை இசைப் பாடல் நிகழ்ச்சியான ஒளிக்கீற்று, ஐரோப்பா கடந்து தமிழர் வாழும் பல்வேறு தேசங்களிலும் பிரபலமடைந்தது. அதனைத்தொடர்ந்து 
கனடா tviதொலைக்காட்சியில் இன்றுவரை ஒளிபரப்பாகி வருகின்றது. புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் திரை இசைப் பாடல்களுக்கான தளம் இல்லாதிருந்த சூழலில், ஒளிக்கீற்று அந்த குறையைத் தீர்த்தது.

தமிழர்களின் கலை முயற்சிக்கு களம் அமைத்த ‘ஒளிக்கீற்று’ எமக்கான கலைப்படைப்பு என்ற ரீதியில் மக்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்த ஒளிஒவியத்தின் இவ் நிகழ்ச்சியானது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச்செல்கின்றது. அந்த வகையில் வருடந்தோறும் திரை இசைப்பாடற்போட்டியை ஒளிஓவியம் நிறுவனத்தால் நடத்தி ஒளிக்கீற்று விருதுடன் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. 2013 ஆம் ஆண்டுக்கான திரையிசைப்பாடற்போட்டி 12-01-2014 நடைபெறவுள்ளது.
பரிசுகள் எவை?
நடுவர்களால் தெரிவு செய்யப்படும் முதல் 3 பாடல்களுக்கு ஒளிக்கீற்று விருதுடன் முறையே 1000, 750, 500 euro பணப்பரிசுகளும் வழங்கப்படும். மற்றும் இறுதிக்கட்டச் சுற்றுக்கு தேர்வாகும் 10 பாடல்களில், பார்வையாளர்களால் வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் பாடலுக்கு ‘ஒளிக்கீற்று 2013 பார்வையாளர் விருதும்’ வழங்கப்படும். இவை மட்டுமல்லாது நடுவர்களின் தீர்ப்பில் சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு, நடன அமைப்பு, இசையமைப்பு, பாடல் வரிகள், இயக்கம் ஆகியவற்றுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
மேலதிக விபரங்கள் அறிய -

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles