உலகத்தில் பொதுவாக இருக்கும் பெரிய பிரச்சினை புகைத்தல். அதில் எவ்வளவுதான் தீமைகள் இருந்தாலும், அதைப்பற்றி எத்தனை தடவைகள்தான் எடுத்துசொன்னாலும் உலகம் அந்த பழக்கத்தை மட்டும் விட்டுக்கொள்வதாகவில்லை. புகைத்தலின் இறுதி முடிவு மரணம்தான் என்பதை கண்முன்னே உதாரணமாக கண்டாலும் யாரும் திருந்தவில்லை.
புகைப்பழக்கத்தாலும், குடிப்பழக்கத்தாலும் தந்தை இறந்துபோக அநாதையாகிறான் ஒரு சிறுவன். அந்த அநாதை சிறுவனின் வறுமையை காரணமாக கொண்டு அவனுக்கு சாப்பாடு மட்டும் தருவதாக கூறி தன்னிடம் வேலைக்கு அமர்த்துகிறார் ஒரு சைக்கிள் கடைக்காரர். ஆனால் சிறுவனுக்கோ படிக்கவேண்டும் என்பதில்தான் ஆர்வம். அதனால் அவரிடம் சம்பளமாக பணம் கேட்க கடைக்காரர் கொடுக்க மறுக்கிறார்.
பாடலை பார்வையிட இத அழுத்துங்கள்
பணம் கிடைக்காவிட்டாலும் சாப்பாடு கிடைக்கிறதே என்பதனால் அங்கு வேலை செய்கிறான் அச்சிறுவன். தன் தந்தையை போலவே தன் முதலாளியும் புகைப்பிடிப்பதை கண்டு அஞ்சும் அச் சிறுவன் அவரிடம் சென்று புகைப்பிடிக்கவேண்டாம் என்று கெஞ்சுகிறான். ஆனால் அவர் அவனை விரட்டிவிடுகிறார். இப்படியே சென்றுகொண்டிருக்கும்போது சில நாட்களாக அந்த சிறுவன் கடைக்கு சென்று முதலாளிக்கு என்று சொல்லி சிகரட் வாங்குகிறான். தொடர்ந்து சில நாட்கள் இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இதனை முதலாளி கண்டுபிடித்து, ஒரு நாள் அச்சிறுவன் சிகரெட் வாங்க்க்கொண்டு செல்லும்போது அவனை பின் தொடர்ந்து செல்கிறார்.
அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை குறும்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். குறும்படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் செய்திருக்கிறார் யுறா சன்வா. அத்தனை பணிகளையும் ஒருவரே செய்திருப்பதன் விளைவு குறும்படத்தில் தெரிகிறது. நல்லதொரு கதைக்கரு. ஆனால் அதை காட்சிப்படுத்துவதில் சற்று சறுக்கிவிட்டார். பணிகளை ஒவ்வொருவரிடம் பிரித்து கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வந்திருக்கலாம். 5 நிமிடத்துக்குள் வந்திருக்கவேண்டிய குறும்படம் எடிட்டிங் தவறால் 14 நிமிடங்கள் வரை நீண்டுவிட்டது.
ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. அதேபோல சைக்கிள் கடைக்காரராக நடித்திருப்பவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. சமூகத்துக்கு நல்லதொரு கருத்தை சொல்லும் அட்டகாசமான கதை களத்தை தெரிவுசெய்த யுறா சன்வாவிற்கு பாராட்டுக்கள்.
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
0 comments:
Post a Comment