ராகம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக N.ராதா தயாரித்து இயக்கியிருக்கும் படம் சிவ சேனை, இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. தயாரிப்பாளர் –இயக்குனர் N ராதா, கிரியேட்டிவ் டைரக்டர் ஹக்கீம், நடிகை இந்து மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன பங்கேற்பாளர் செல்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவசேனையின் கதை

படத்தின் தலைப்பிற்கேற்ற மாதிரியே கதாநாயகன் சிவாவும் அவரது சேனையாக அவரது நண்பர்களும் சேர்ந்து தங்களைச் சுற்றி நடக்கும் களவு மற்றும் அநியாயங்களை எப்படி முறியடிக்கிறார்கள், சம்பந்தப்பட்டவர்களை எப்படி அழிக்கிறார்கள் என்பதை குடும்பப்பாங்கான கதையுடன் கொஞ்சம் சஸ்பென்ஸ் திரில்லையும் சேர்த்து விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நடிகர்கள்
முழுக்க முழுக்க ஐரோப்பா குறிப்பாக லண்டன் நகரிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் சுஜித், கதாநாயகி தர்ஷியா, இன்னொரு கதாநாயகி அனுசுயா ஆகியோருடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிவா சேனையின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்.ராதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் மட்டுமல்லாது அவர்கள் அனைவருமே புலம்பெர்ந்து வாழும் தமிழர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்குத் தமிழ்ப்படங்களைப் போட்டுக்காட்டியும் , ஒத்திகை பார்த்தும் நடிப்புப் பயிற்சி அளித்துள்ளார் இயக்குனர் ராதா.
More stills
பாடல்கள் மற்றும் இசை
படத்தில் டூயட் பாடல் என்று எதுவும் இல்லையெனினும், சூழ் நிலைக்கேற்றவாறு ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தென்றல் சானிய, இளங்கவி, பிரபாளினி பிரபாகரன், ஜுதன் ஸ்ரீ ஆகிய புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ்க்கவிஞர்களும் இயக்குனர் நாகரத்தினம் ராதாவும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். பாடல்களைப் பாடியவர்களும் வெளி நாடு வாழ்த்தமிழ்ப் பாடகர்களே! பாடல்களுக்கான இசையை வேனன் ஜி சேகரன் (4 பாடல்கள்) மற்றும் பிரபாளினி பிரபாகரன் (1 பாடல்) அமைக்க விறுவிறுப்பான திரைக்கதைக்கு பின்னணி இசையமைத்திருக்கிறார் நம்ம ஊர் இசையமைப்பாளர் தினா.
இயக்குனர் குறிப்பு
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் ஒருவரான N ராதா என்று அழைக்கப்படும் நாகரத்தினம் ராதா ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரபப்பாகும் தீபம் தொலைக்காட்சியில் சித்ரா என்கிற தொலைக்காட்சித் தொடரை 176 எபிசோடுகளுக்கும் மேலாக எழுதி இயக்கி தயாரித்து அனுபவம் பெற்றவர்.
சிவ சேனையைப் பற்றி இயக்குனர் என் ராதா கூறும் போது, “இன்னும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென முழு நேரத்தொழிலாக திரைப்படத்துறை ஏதும் அமைக்கப்படாத நிலையில், எங்கள் வாழ்வாதாரத்திற்காக வேறு ஏதேனும் பணிகளில் இருந்து கொண்டே திரைப்படத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்கள் என்று நடிகர்களையும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து, மைனஸ் 3 டிகிரி தட்பவெட்ப நிலையிலும் பெரும் சிரமங்களுக்கிடையில் இந்தப் படத்தினைத் தயாரித்து இயக்கியிருக்கிறோம்…. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் முன் நாங்கள் ஒன்றுமேயில்லைதான் எனினும், நல்ல ஒரு முதல் அடி எடுத்து வைத்த திருப்தி எங்களுக்கு இருக்கிறது…. விஞ்ஞான வளர்ச்சியினைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் களவு செய்கிறார்கள் என்பதைப் பற்றிய விழிப்புணர்ச்சி படமாக சிவ சேனை வளர்ந்திருக்கிறது… இது போன்ற களவுகள் உலகமுழுவதும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது…. இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டெர்நேஷனல் நிறுவனம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி இந்தியா உட்பட உலகமுழுவதும் வெளியிட இருக்கிறார்கள்..” என்றார்.
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment