கலைத்துறையின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பவர்களில் பாடகர்களும் தனித்துவம் கொண்டு காணப்படுகின்றனர் இந்த வகையில் நாங்கள் இன்று பாடகர், நாட்டியதாரகை, நடிகை என பல முகம் கொண்ட ஒரு இளம் பாடகி அர்ச்சனா செல்லத்துரையோடு நாங்கள் யாழ் பிலிமில் இருந்து தொடர்பு கொண்டோம் இனிமையாக பேசினார்
நாங்கள் உங்களை நேர்காணல் செய்ய வந்துள்ளோம் என்று சொன்னதும் உற்சாகமடைந்து பேச ஆரம்பித்தார்
எனது சொந்தஇடம் ஈழம் ஆனால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் டென்மார்க்கில்தான் நான் பாடகி ஆக வேண்டும் என்பது சிறுவயது முதல் ஆசை எங்களுடைய வீட்டில் கலைத்துறைக்கு முக்கியத்துவம் அதிகம் ஆகையால் எனக்கு எந்தவித தடையும் இல்லாமல் மேலே வர முடிந்தது வீட்டில் எல்லோருடைய ஆதரவும் இருந்தது அதனால் என்னால் இவ்வளவுக்கு சுதந்திரமாக பாட முடிகின்றது.இவ்வாறு இனிமையாக பேசினவரை இடைமறித்தோம் சில வினாக்களை வினாவினோம் அவரும் புன்னகையோடு அழித்த பதில்களும் உங்களுக்காக
கேள்வி- அது எவ்வாறு உண்டானது?
பதில்-சிறுவயதில் வானொலியில் பாடல்கள் போனால் நானாகவே ஆட ஆரம்பித்துவிடுவேன் இதைப்பார்த்த எனது பெற்றோர்கள் நடனம் பழகுவதற்க்கு ஒழுங்கு செய்துகொடுத்தார்கள் எனது குருவும் ஆசிரியரும் "சுமித்திரா சுகேந்திரா" அவர்களிடம் 3வது வயதில் நடனம் கற்க தொடங்கினேன்
பதில்-சிறுவயதில் வானொலியில் பாடல்கள் போனால் நானாகவே ஆட ஆரம்பித்துவிடுவேன் இதைப்பார்த்த எனது பெற்றோர்கள் நடனம் பழகுவதற்க்கு ஒழுங்கு செய்துகொடுத்தார்கள் எனது குருவும் ஆசிரியரும் "சுமித்திரா சுகேந்திரா" அவர்களிடம் 3வது வயதில் நடனம் கற்க தொடங்கினேன்
தொடந்து பாடல்கள் பாட ஆரம்பித்தேன் முறைப்படி சங்கீதம் கற்கவில்லை ஆரம்பத்தில் 9 வயதில் நான் பாட ஆரம்பித்தேன் ஆனால் எனக்குள் ஏதொ ஒரு திறமை இருப்பதை கண்டறிந்த எனது பெற்றோர்கள் முறைப்படி சங்கீதம் கற்க ஒழுங்கமைத்து தந்தார்கள் அதன் பிறகு பத்துவயதில் வயலின் முறைப்படி கற்றுக்கொண்டேன்
அதேபோல நான் ibc போட்டி நிகழ்ச்சியில் இரண்டு தடவை போட்டியில் கல்ந்துகொண்டு 2ம் இடத்தை பிடித்தேன் இரண்டு தடவையும்
13 வயதில் எனது நடனம் மேடை அரங்கேற்றம் டென்மார்க்கில் இடம்பெற்றது. பிறகு நான் டென்மார்க்கில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மேடைகளில் பாட ஆரம்பித்து விட்டேன்.இவ்வாறு ஆரம்பித்ததுதான் எனது கலைப்பயணம்

பதில்- ஆம் நடித்தேன்
"பூக்கள்", "இளம்புயல்" எனும் இரு திரைப்படத்தில் நடித்தேன்
சிறுவயதில் திரைப்படம் பார்க்கும் போது நடிக்கனும் என்பது ஆசை இருந்தது அப்போது கிடைத்த ஒரு சந்தர்ப்பம் தான் இந்த இரு திரைப்படமும் அனுபவம் என்று சொன்னால் வசனம் பேசும்போது மிகவும் சிரமப்பட்டேன் ஆரம்பத்தில் பிறகு நான் புரிந்துகொண்டேன் வசனம் பேசும்போது அவதானமாக இருக்கவேண்டும் என்று இவ்வாறு இனிமையாக பேசியவரை இடைமறித்து இன்னும் ஒரு வினா கேட்டேன்
கேள்வி- ஏன் நீங்கள் தொடந்து நடிக்கவில்லை? என்றதும் சிரித்துகொண்டு இனிமையான பதில் அளிதார்
பதில்- நான் எனது பாடல்களில் பாடகியாக நடித்துள்ளேன் ஆனால் நடிப்பதைவிட பாடகியாக வேண்டும் என்பதே விருப்பம் அதனால் பாடல் பாடுவதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்
பதில்- நான் எனது பாடல்களில் பாடகியாக நடித்துள்ளேன் ஆனால் நடிப்பதைவிட பாடகியாக வேண்டும் என்பதே விருப்பம் அதனால் பாடல் பாடுவதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்
கேள்வி-நீங்கள் பாடல்கள் பாடியுள்ளீர்களே அதைபற்றி சொல்லுங்க?
பதில்-ஆம் நான் முதல் முதல் பாடியது எனது அண்ணாவின் இசையில்(வசந்த் செல்லத்துரை) தான் பாடினேன் அந்த இசை தட்டின் பெயர் "இளமை இனிமை புதுமை" இதன்மூலம்தான் நான் பாடகியாக மாறினேன். ஆனால் அண்ணாவிற்க்கு தெரியும் என்னோட குரல்தொனி அதுமட்டும் இல்லை என்னோட பாடல் எப்படி வரும் என்றும் அவருக்கு தெரியும் அதனால்தான் நான் ஆரம்ப்த்தில் அண்ணாவின் இசையில் பாடினேன்.அதன் பிறகு தொடந்து பாடல்கள் பாட சந்தர்ப்பங்கள் கிடைத்தது என்றவரை இடைமறித்தோம்
பதில்-ஆம் நான் முதல் முதல் பாடியது எனது அண்ணாவின் இசையில்(வசந்த் செல்லத்துரை) தான் பாடினேன் அந்த இசை தட்டின் பெயர் "இளமை இனிமை புதுமை" இதன்மூலம்தான் நான் பாடகியாக மாறினேன். ஆனால் அண்ணாவிற்க்கு தெரியும் என்னோட குரல்தொனி அதுமட்டும் இல்லை என்னோட பாடல் எப்படி வரும் என்றும் அவருக்கு தெரியும் அதனால்தான் நான் ஆரம்ப்த்தில் அண்ணாவின் இசையில் பாடினேன்.அதன் பிறகு தொடந்து பாடல்கள் பாட சந்தர்ப்பங்கள் கிடைத்தது என்றவரை இடைமறித்தோம்
ஒரு வினாவைத்தொடுத்தோம்

பதில்-ஆம்
வசந்த் செல்லத்துரை (டென்மார்க்)
சுஜித் .ஜி (லண்டன்)
சந்தோஸ் (லண்டன்)
கெனி -(ஜேர்மன்)
M.c சாஜி (லண்டன்)
Mr .ராகீஸ் (டென்மார்க்)
Ltz.(டென்மார்க்)
Rk கபி (நோர்வே)
ஸ் ரீவ் கிளிவ் (கனடா)
நிசான் & ஜீவன் (பிரான்ஸ்)
ஆரியன் டினேஸ் கனகரத்தினம் (ஈழம்)
சுரேஸ்டவன் (நெதர்லாந்து)
ரி.ஜே (லண்டன்)
சாமில் ( ஈழம்)
கேள்வி-நீங்கள் தாயகத்தில் உள்ளவர்களோடு எவ்வாறு பணிபுரிந்தீர்கள் என்று கூற முடியுமா?
பதில்- நிச்சயமாக
அவர்கள் இசையின் வடிவம் அனுப்பிவிடுவார்கள் நான் தான் பாடி அனுப்புவேன் என்னால் தனிமையில் முதல் செய்ய தெரியாது அண்ணா செய்யும் போது பார்த்தவற்றை வைத்து நான் றெக்கோட்பண்ணி பழகினேன் அண்ணாவைக்கேட்டேன் அவர் சொல்லுவார் நீ தனிமையில் பழகு என்று சொல்லுவார் ஏன் என்றால் அப்பொழுதுதான் நினைவில் இருக்கும் என்று சொல்லுவார் அதே போலவே நானும் பழகி கொண்டேன்

கேள்வி-உங்களுடைய பெற்றோர்களுடைய, சகோதரர்களுடைய ஆதரவு எவ்வாறு உங்களுடைய படைப்புகளிற்க்கு உண்டு?
பதில்-சின்னவதில் இருந்தே படிப்புக்கு இருப்பது போலவே கலைக்கு சின்ன வயதிலிருந்தே எங்களுக்கு உதவி செய்வாங்க
வீட்டில் சுதந்திரம் கூட எதற்க்கும் அவர்கள் ஊக்கம் அளிப்பார்கள் அதனால்தான் நான் இன்று கலைத்துறையில் இருக்கின்றேன்
கேள்வி-கலைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?
பதில்--என்னைவிட பாடகர்கள் இருக்குராங்க வெளியில் தெரியாமல் இருக்கின்றார்கள் அதிலும் பெண்கள் தான் வெளியில் வரவேண்டும் அவர்களிற்க்கு சொல்லவிரும்புகின்றது ஒன்றுதான் நீங்கள் திறமைகளை வெளியில் காட்டுங்க இன்னும் நிறைய பெண் கலைஞர்கள் வெளிவரனும் எனக்கு தெரிந்து நிறைய பென்கள் இப்படி இருக்கின்றார்கள் அவர்கள் வெளியில் வரனும் என்று சொல்லி முடித்தார்
கே-யாருக்காவது நன்றி சொல்ல விரும்புகின்ரீர்களா?
பதில்-ஆம்
எனது பெற்றோர்கள் சகோதரர்கள் மற்றும் எனது ரசிகர்களிற்க்கு அவர்கள் இல்லைஎன்றால் நாம் இல்லை
அதை விட என்னை நம்பி பாடல் கொடுக்கின்றவங்களிற்க்கு
இலவசமாக செய்து கொடுத்தவங்களிற்கு நன்றி
அதை விட ஊடகங்களிற்க்கும் நன்றி சொல்லவேண்டும் நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு விடயத்திற்கும் உற்சாகம் அளிப்பதோடு மக்களிடயே அதைக்கொண்டுபோய் சேர்கின்றார்கள் ஆகவே அவர்களிற்க்கு நன்றி சொல்லவேண்டும் அதை விட ஈழத்து கலைஞர்களின் படைப்புக்களை வெளியிட்டு தொடர்ச்சியா ஈழத்து கலைஞர்களுக்கு பெரும் ஊடக பலாமாக இருக்கும் யாழ் பிலிம் நிறுவனத்துக்கும் மிக்க நன்றிகள் என்று சொல்லி முடிதார்
அர்ச்சனா செல்லத்துரை மென் மேலும் பல துறைகளும் வெற்றியீட்டி சாதனை புரிய வேண்டும் என்று எமது யாழ் பிலிம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்
நேர்காணல்,தொகுத்து அளித்தவர் -முகுந்தன்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment