இலண்டனில் இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுதுதற் துறையில் முதுநிலைமாணிப் படிப்பை (M.A. in Screen writing) முடித்த ஈழத்து குறுந்திரைப்படத்துறையின் சிரேஷ்ட கலைஞர் ஞானதாஸ் காசிநாதர் தமிழ்த்தந்திக்கு (09.03.2014 & 16.03.2014) சிறப்புப்பேட்டி
நேர்கண்டவர் : கானா வரோ
கேள்வி : தமிழ்ச் சூழலில் இன்று அதிகளவில் தோன்றியிருக்கும் குறுந்திரைப்பட அலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : நீங்கள் சொன்னது போல் இப்பொழுது காணப்படுவது ஒரு அலை. இத்தகைய வேகமான அலை நாங்கள் திரைப்பட முயற்சிகளை ஆரம்பித்த போது இருக்கவில்லை. பலருக்கு விருப்பம் இருந்தாலும், இந்தத் துறைக்குள் காலடி வைப்பதற்கான பயம் இருந்தது. இலவசப் பயிற்சிகளை நாம் வழங்கிய போதும், இவ்வளவு இளைஞர்கள் வரவில்லை. வந்தவர்களில் பாதிக்குப் மேல் நடுத்தர வயதினராக இருந்தனர். அவர்களில் பலர் ஒரு ஆதங்கத்தில் வந்தவர்கள். தீராத் தாகத்தில் வந்தவர்கள் அல்ல. அதனால் அவர்களில் பெரும்பாலானோர் நாம் வழங்கிய பயிற்சியை ஒரு மேலதிக அறிவாக, தமது அறிவுப் பசிக்கான தீனியாக எடுத்துக் கொண்டு தத்தமது வேலைகளுக்குத் திரும்பிவிட்டார்கள். உண்மையில் நீடித்த நின்றவர்கள் ஒரு சில இளையவர்கள் மட்டும்தான். ஆனால், இன்று ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள், தீராத்தாகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆபத்துக்களையும், சவால்களையும், ஏளனங்களையும், பழிப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராகவும் உள்ளார்கள். எதிர் கொண்டவாறும் உள்ளனர். உண்மையில் இலங்கையின் தமிழ்ச் சூழலில் திரைப்படத்துறை இன்று வரை முழுமையான வடிவம் பெறாது போனதற்குக் காரணம் எமது மக்களிடையே இருந்து வந்த தயக்க சுபாவம். புதியனவற்றை முயற்சி செய்வதில் உள்ள பயம். பழக்கப்பட்ட விடயங்களை மட்டுமே செய்யும் பழக்கம். எமக்கு முன்னால் போனவர்கள் எந்தத் தொழிலைச் செய்தார்கள், எதைப் படித்தார்கள், எத்தகைய கலைச் செயற்பாடு, இலக்கியச் செயற்பாடு செய்தார்களோ அவற்றை அப்பிடியே தடம் மாறாது பின்பற்றும் சுபாவம். ரிஸ்க் எடுக்க விரும்பாத குணம். உத்திரவாதமான விடயங்களில் மட்டும் கால் வைப்பது. இதுவே எமது மனோபாவமாகவும் ஒருவகையில் பண்பாடாகவும் இருந்து வந்துள்ளது. மந்தைக் கூட்டத்திலிருந்து எந்த மந்தையும் விலக முனைவதில்லை. அதனால் புதிய வாய்ப்புகளை, புதிய புல்வெளிகளை, புதிய வனாந்தரங்களைத் தேடிப் போவதில்லை.
ஆனால் இன்று பல ஆடுகள் மந்தைக் கூட்டத்தில் இருந்து விலகி வந்துவிட்டன. அவர்கள் தம் இஷ்டத்துக்கு துள்ளி ஓடுகிறார்கள். புதிய புல்வெளிகளையும் வரப்புகளையும், காடுகளையும் தரிசிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த எழுச்சியை இரண்டு வகையில் அனுகூலமாகபப் பார்க்கிறேன். ஒன்று, இது இலங்கையில் தமிழ்த் திரைப்படத்துறையில் மாற்றத்துக்கான, ஒரு பாய்ச்சலுக்கான எழுச்சியாக உள்ளது. மற்றது சமூக நோக்கில் பார்த்தால், எமது சமூகப் போக்கில் ஒரு மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள் மரபுரீதியிலான கல்விமுறைமை, தொழிற்துறை, கலை இலக்கியச் செயற்பாடுகளில் இருந்து உடைத்துக் கொண்டு வரத் தொடங்கியுள்ளார்கள். தயக்கம், அதீத முன்னெச்சரிக்கை போன்ற எமது சமூகக் கூட்டு உளவியல் உடைபடத் தொடங்கியுள்ளது. தயங்கித் தயங்கி இருப்பதை விட முயற்சி செய்து தவறுவிட்டு, தோற்று தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளல் மேலானது என இளைஞர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த அலையினால் சில பாதகமான விளைவுகளுக்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவ்வாறு பாதகமான விசயங்கள் சில நடைபெறத் தொடங்கிவிட்டாலும், இந்த அலை தவிர்க்கப்பட முடியாத ஒன்று. பேண்தனைமை கொண்ட அதாவது நிலைத்து நிற்கக்கூடிய தமிழச் சினிமாச் செயற்பாட்டை அல்லது அத்தகைய கலாச்சாரத்தை இலங்கையின் தமிழ்ச் சூழலில் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்த அலை தவிர்க்க முடியாத ஒன்று.
இன்று நடைபெற்றுவரும் சினிமாச் செயற்பாடுகளின் ஆரம்பத்தை அல்லது இன்றைய ஈழத்துச் சினிமாச் செல்நெறியின் தொடக்கத்தை குறிப்பாகக் குறுந்திரைப்பட எழுச்சியை நான் 90களில் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்பட முயற்சிகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். இத்தகைய முயற்சிகள் ஆரம்பத்தில் தனிநபர்களால் தன்னியல்பாக, தன்னார்வமாக தொடங்கப்பட்டாலும் அவர்களின் முயற்சிகளின் பின்னணியில் இரண்டு விடயங்கள் இருந்தன. ஒன்று மாற்றுச் சினிமா அல்லது நல்ல சினிமா என்ற புத்திஜீவித்தனம். அல்லது கோட்பாட்டு ரீதியிலான பார்வை. உண்மையில் இந்தக் கோட்டுபாடுகளை அல்லது இத்தகைய கருத்தியல்களைப் பரப்பியவர்கள் சினிமாவைப் படைக்கும் முயற்சிகள் ஏதும் பெரியளவில் செய்யாவிட்டாலும் தன்னியல்பாக திரைப்படம் செய்ய வெளிக்கிட்டவர்கள் இத்தகைய கோட்பாட்டு பார்வைக்கு ஆட்பட்டவர்களாகவும் விரும்பியோ விரும்பாமலோ அத்தகைய கோட்பாடுகளினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்தனர். மற்றது அரசியற் தேவை ஒன்றிருந்தது. அந்த வகையில், ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சினிமாப் படைப்புகள் குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டுக்கு உதவுபவையாகவும் குறைந்தபட்சம் அந்த அரசியல் நிலைப்பாட்டைப் பாதிக்காதவையாகவும் இருக்க வேண்டிய கட்டுப்பாடு இருந்தது. அன்றைய படைப்பாளிகள் அதனைத் தமது கடமைப்பாடாகவும் கொண்டிருந்தனர். இந்த இரண்டும் சுதந்திரமான சினிமாப் பரீட்சார்த்தங்களை செய்து பார்க்க பௌதீக ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ அல்லது இரண்டு வகையிலும் தடையாக இருந்தன. அடுத்தது, மிகக் குறைவான வளங்கள். இந்த மூன்று காரணிகளும் ஒரு வரையறைக்குள், அல்லது எல்லைக்குள் நின்றவாறே திரைப்பட முயற்சிகள் செய்யப்பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டிருந்தன. ஆனால், இன்றைய நிலை எல்லாவற்றையும் மீறி அவரவர் நினைத்ததை எழுதி, அல்லது எழுதாமலே படம் பிடித்து விருப்பத்துக்கு எடிட் செய்து இசை போட்டு எபெக்கட் போட்டு அவற்றைப் பின்னர் சுதந்திரமாக யூ டியூப், முகநூல் வழியாக பகிரவும், பாராட்டுகள், ஊக்கிவிப்புகள், விமர்சனங்கள் என்பவற்றை உடனுக்குடன் பெறவும் கூடியதான சூழலாக உள்ளது.
உண்மையில் இத்தகைய ஒரு கட்டம் தேவையாக உள்ளது. அதிகபட்ச பரீட்சார்த்தங்கள், சரிகள், தவறுகள், வெற்றிகள், தோல்விகளை செய்து பார்ப்பதற்கான ஒரு காலகட்டம் இல்லாமல் அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது.
கேள்வி : இன்றைய குறுந்திரைப்படச் செயற்பாடுகளினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் என்று எதனைச் சொல்கிறீர்கள்?
பதில் : ஈழத்தில் நடைபெறும் குறுந்திரைப்படச் செயற்பாடுகளை ஈழத்துத் திரைப்படச் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே நான் பார்க்கிறேன். உண்மையில், இதிலிருந்துதான் ஈழத்துத் திரைப்படத்துறையின் செல்நெறியைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அந்தவகையில், குறுந்திரைப்படச் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் தமிழ்ச் சினிமா முயற்சி ஏன் அவசியம், எத்தகைய தேவையின் அடிப்படையில் திரைப்பட முயற்சிகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டன என்பதனைக் கவனத்தில் எடுக்காது செயற்பட்டுக் கொண்டிருப்பது பல பாதகமான விளைவுகளை கொண்டுவந்து சேர்க்கும்.
உண்மையில், இங்கு திரைப்பட முயற்சியானது, ஒரு வரலாற்றுத் தேவையின் அடிப்படையிலேயே தோன்றியது. நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான தொழிற்பேட்டையின் அச்சுகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற இந்திய போர்மியூலாத் தமிழ்ச் சினிமாக்களில் இருந்து மாறுபட்ட சினிமாக்களுக்கான தேவை ஒன்று எழுந்தது என்பது முதல் விடயம் ஆகும். அடுத்தது, எமது மக்களின் அன்றாட வாழ்வியலை சினிமா என்னும் வலிமைமிக்க கலைவடிவில் யதார்த்தத்துடன் பிரதிபலிப்பதற்கான தேவை ஒன்று இருந்தது. இருந்து கொண்டிருக்கின்றது. வேறுவிதமாகச் சொன்னால் திரைப்படங்கள் மூலமாக இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய தேவை உள்ளது. அந்தக் குரலையே நமது மக்கள் கேட்கவும், பார்க்கவும் விரும்புகின்றனர். உலக சினிமா இரசிகர்கள்கூட இலங்கையில் இருந்து ஒரு இந்தியச் சினிமாவையோ, ஹொலிவூட் சினிமாவையோ நிச்சயம் பார்க்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறார்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவற்றையே பார்க்க விரும்புவார்கள்.
இன்றைய பெரும்பாலான குறுந்திரைப்பட, முழுநீளத் திரைப்பட முயற்சிகள் இந்தியச் சினிமாவையோ அல்லது ஹொலிவூட் சினிமாவையோ மறு பிரதியீடு செய்து பார்க்கும் முயற்சியாக உள்ளன. இதில் நான் சரி, பிழை சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால், இது ஒரு புத்திசாலித்தமான உத்தி அல்ல என்பதனை மட்டும் சொல்வேன். இந்தப் போக்கானது, இறுதியில் படைப்பாளிகளை விரக்தி நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஆபத்து உள்ளது. ஈழத்துப் படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவேண்டும் எனப் பரவலாகப் பேசிக் கொள்ளப்படுகின்றது. அது நியாயம். ஆனால், வர்த்தக ரீதியில் ஒரு பொருள் எப்போது வெற்றி பெறும்? இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கான பிரத்தியேக தேவை எதுவோ, அதனை எமது படைப்புகள் நிவர்த்தி செய்வதன் மூலமாகவே ஈழத்துத் தமிழ்ச் சினிமாக்கள் வர்த்தக ரீதியில் தமக்கான இடத்தினைப் பெறமுடியும். இல்லையேல், ஒரு கட்டத்தில் எமது மக்களுக்கே சலித்துப் போய்விடும். பின்னர், ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்னும் ப்ராண்டைக் கண்டவுடனேயே அவர்கள் ஓடிவிடும் அபாயமும் உள்ளது.
கேள்வி : இந்தியச் சினிமாக்களுக்குப் போட்டியாக இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெற முடியுமா?
பதில் : இந்தியச் சினிமாக்களுக்குப் போட்டியாக என்று கேட்டால், நிச்சயம் இல்லை அல்லது மிகக் கடினம் அல்லது வெகுகாலம் எடுக்கும். 50 வருடங்கள் கூடப் போதாது. ஆனால், ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் இந்தியச் சினிமாவுக்குப் போட்டியாக அமையாது இருக்குமேயானால், வர்த்தக ரீதியில் தமக்கான ஒரு இடத்தினைப் பெற முடியும். இப்போதே அதனைப் பெறவும் முடியும். ஒரே பொருளை இரண்டு கம்பனிகள் உற்பத்தி செய்யும்போதுதான் போட்டி எழ ஆரம்பிக்கின்றது. இன்னொரு தடத்தில் நாம் செல்லும்போது போட்டிக்கான வாய்ப்பு என்பது இல்லை என்றே கூறமுடியும். வர்த்தக ரீதியாக எமக்கான தனி இடத்தினை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
அதற்கு நாம் மூலோபாய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சினிமாப் படைப்பை வெற்றிபெறச் செய்யப் பல துரும்புகள் உள்ளன. இந்தியச் சினிமா எந்தத் துரும்பைத் தன்வசம் வைத்திருக்கிறதோ, அதன் பலம் எதில் தங்கி இருக்கின்றதோ அதனை நாம் கையில் எடுக்க முனையக் கூடாது. அவர்கள் எதில் பலவீனமாக உள்ளார்களோ, எந்தத் துரும்பினை அவர்கள் இன்னும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ, எதனைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு நடைமுறைச் சிக்கல் உள்ளதோ அதனை நாம் எமக்கான ஆயுதமாகவும், துரும்பாகவும் மாற்ற வேண்டும். அதில் நாம் பலப்பட வேண்டும்.
அதற்காக, “அவர்கள் ஹொலிவூட் அளவுக்குத் தொழிநுட்ப ரீதியில் வளரவில்லைத்தானே! நாம் ‘அவதார்’ அளவுக்குத் தொழிநுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த படங்களைச் செய்து ஒரு கலக்குக் கலக்குவம்” என்று வெளிக்கிட்டால் அது முட்டாள்த்தனம். பட்ஜெட் என்பதும் ஒரு துரும்புதான். உயர் பட்ஜெட் படைப்புகள் என்ற ரீதியில் அவர்களுடன் போட்டிபோட முடியாது. அந்த விடயத்தில் குறைந்த பட்ஜெட் என்பதனையே எமது துரும்பாக அல்லது பலமாகக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் வர்த்தக ரீதியாக எமக்கான இடத்தினைப் பிடிப்பது என்பது எமது மூலோபாய ரீதியிலான அணுகுமுறையில் உள்ளது.
கேள்வி : மூலோபாய அணுகுமுறை என்னும் சொல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றீர்கள். அப்படியென்றால் அதனை என்னவென்று விளக்க முடியுமா?
பதில் : ஆங்கிலத்தில் இதனை Strategic Approach என்று சொல்வார்கள். லோக்கலாகச் சொன்னால், வெட்டினம், கவிட்டம் என்று ஒரு விடயத்தில் இறங்காமல், செயல் - விளைவு எனும் பொறிமுறையினைப் பாவித்து விடயங்களை நிகழச் செய்தல் மூலோபாய அணுகுமுறை ஆகும். மாடு மாதிரி மாயாமல், இயல்பாக நடைபெறுவதற்கான ஒரு மெக்கானிசத்தை உருவாக்குதல். இதனைச் செய்தால், இது நடக்கும். அதனைச் செய்தால் பிறகு மற்றது நடக்கும் என்னும் திட்டவரைபுடன் செய்வது. எவரெஸ்ட் உச்சிக்கு வெட்டினம், கவிட்டம் என்று ஏற முடியுமா? முதலில் அந்த உச்சிக்குப் போகலாம். அதற்குக் கயிறைப் பயன்படுத்தலாம். பிறகு அதில் இருந்து கொழுக்கிகளைப் பயன்படுத்தி அடுத்த உச்சிக்குப் போகலாம். அங்கே சரியான பனிப்புயல் வீசும். அதனை எப்படி எதிர்கொள்வது? அதில் இருந்து அடுத்த உச்சிக்கு எப்படிப் போவது என்பதனைத் திட்டமிட்டுச் செய்தால் தான் எவரெஸ்ட் உச்சியை இலகுவில் அடைய முடியும். உணர்ச்சி வசப்பட்டு மூர்க்கத்தோடு எவரெஸ்ட் உச்சிக்குப் போக வெளிக்கிட்டால் சென்றடைய ஒரு ஆயுள் பிடிக்கும். இல்லையேல் இடையிலேயே திரும்பவோ அல்லது மரணிக்கவோ வேண்டிவரும்.
எமது முயற்சிகளையும், உழைப்பையும், படைப்பாற்றலையும் வெறும் மூர்க்கத்துக்கும், உணர்ச்சிப் பிரவாகத்துக்கும் உட்பட்டுப் பயன்படுத்தாமல், ஒன்றின் மூலம் இன்னொன்று நிகழக்கூடிய வகையில் பொருத்தமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். ஈழத்துச் சினிமாச் செயற்பாட்டாளர்கள் இதனைத் தனித்தனியாகச் செய்ய முடியாது. கூட்டாகச் செய்ய வேண்டும். அந்தவகையில், ஈழத்துத் திரைப்படச் செயற்பாட்டாளர்கள் குறைந்தபட்ச ஒத்த சிந்தனையின் அடிப்படையிலாவது ஒன்று சேர்ந்து மூலோபாயங்கள் பற்றிக் கலந்துரையாடல் செய்யவும், சில வேலைத்திட்டங்களை ஒரே மாதிரிச் செய்யவும் வேண்டியுள்ளது. அதற்கான சரியான நேரமாக இது உள்ளது. இதற்கு முன்னரும் இந்த வழியில் செயற்பட்டிருக்க முடியாது. அதேவேளை இதனை இனிமேலும் பின்தள்ளியும் போட முடியாது. எல்லோரும் ஒரு குடையின் கீழ் வர முடியாவிட்டாலும், ஒன்றுக்கு மேற்பட்ட குடைக்குள் சரி வந்து கூட்டாகச் சிந்திக்கவும், செயற்படவும் வேண்டியுள்ளது. இங்கு நிறையத் திரைப்படக் கம்பனிகள் தோன்றிவிட்டன. ஆனால், ஒரு சினிமா இயக்கம் கூடத்தோன்றவில்லை. நல்ல சினிமா தோன்றிய இடங்களில் எல்லாம் சினிமா இயக்கங்களே ஆதிக்கம் பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சூழலுக்கு சினிமாக் கம்பனிகளைவிட சினிமா இயக்கங்கள் முக்கியமானவை.
கேள்வி : ஈழத்துத் தமிழ்ச் சினிமாவில் பெண்களின் பங்களிப்புப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில் : பெண்களின் பங்களிப்பு இல்லாது சினிமா இல்லை என்பது எல்லாரும் அறிந்த விடயம். ஆனால், இந்த விடயத்திலும் கூட மூலோபாய ரீதியிலான அணுகுமுறையையே கடைப்பிடிக்க வேண்டும்.
ஈழத்துத் தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களும் மிகவும் இறுக்கமான கட்டமைப்பினைக் கொண்டவை என்பது அறிந்த விடயம். ஆண்கள் அளவுக்குப் பெண்கள் பெருவாரியாகச் சினிமாச் செயற்பாட்டில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் நிலைமைகள் இல்லை. அந்தவகையில், நடிக்க முன்வரும் பெண்களுக்கு சமூகத்திலும், உலகளாவிய ரீதியிலும் கௌரவத்தையும், நேர்மறையான அடையாளத்தையும் பெற்றுத்தரும் படைப்புகளை முதலில் அதிகம் தயாரிக்க வேண்டும். பதிலாக, பெண்களைக் கொச்சைப்படுத்தும் அல்லது அவர்களை வெறும் காட்சிப் பொருளாக்கும் படைப்புகளைச் செய்தல் நல்ல உத்தி அல்ல. அதேபோன்று மலிவான கவன ஈர்ப்பு மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை இலக்காகக் கொண்டு பெண்களை மையப்படுத்திய, சர்ச்சைக்குரிய படைப்புகளைத் தயாரித்தலும் சரியான உத்தி அல்ல. சிங்களப் படைப்பாளிகள் அத்தகைய படைப்புகளைச் செய்வது உண்டு. அதனை நமது படைப்பாளிகள் சிலர் முன்னுதாரணமாகக் கொள்ளும் முனைப்புக் காணப்படுகின்றது. ஆனால், அது எமது சூழலுக்கு ஆபத்தானது.
இரண்டாவது, நடிப்புக்கு அப்பால் பெண்கள், வௌ;வேறு வகிபாகங்களை எடுக்க வாய்ப்பளிக்க வேண்டும். எழுத்து, இயக்கம், தொழிநுட்பம் சார்ந்த விடயங்களில் தம்மை அவர்கள் வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். பெண்கள் இயக்குனர்களாக மாறுவதன் மூலம் ஒன்று சினிமாவில் பெண்களின் பங்களிப்பை நமது சமூகம் கௌரவமாகப் பார்க்கும். அடுத்தது, அந்தப் பெண்களால், பல பெண் நடிகர்கள், இதர கலைஞர்களைச் சினிமாத் துறைக்குள் உள்வாங்க முடியும். ஈழத்துத் தமிழ்ச் சூழலில் கலாநிதி சுமதி சிவமோகன் அவர்கள் அந்த வழியில் இன்று செயற்பட்டு வருவது ஒரு ஆரோக்கியமான விடயம் ஆகும்.
இன்னொரு விடயம், நாம் பெண் நடிகைகளை இந்தியாவலிருந்தோ அல்லது சிங்களச் சினிமாவில் இருந்தோ இறக்குமதி செய்வதும் ஆபத்தானது. அது இன்னொரு வகைச் சிக்கலை ஈழத்துச் சினிமாச் செயற்பாட்டுக்கு உருவாக்குவதுடன் எமது பெண்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும். பெண்களை எவ்வாறு உள்வாங்குவது, அவர்களுக்கான வகிபாகங்கள் என்பது பற்றித் தீர்மானிக்க ஈரானியத் திரைப்படத் துறையின் போக்கை முன்னுதாரணமாகக் கொள்ளுதல் எமக்குப் பொருத்தமானது என நினைக்கிறேன்.
கேள்வி : நீங்கள், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகக் கதைசொல்லடா தமிழா என்னும் முகநூல் குழுவை வழிப்படுத்துவதிலும், கதை ஒளி என்னும் காணொளிக் கதை சொல்லல் செயற்பாட்டிலும் உங்களை அதிகம் ஈடுபடுத்தி வருகின்றீர்கள். இவற்றுக்கும், ஈழத்துத் திரைப்படத்துறை சார்ந்த உங்கள் வேலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
பதில் : ‘கதைசொல்லடா தமிழா’ ஆரம்பித்தது நான்தான். ஆனால், அதனை இப்போது வழிப்படுத்துவது அதன் நிர்வாகக் குழுவும் அதன் உறுப்பினர்களும். அந்தவகையில், அது தானாகவே செயற்பட்டு வருகின்றது. கதை ஒளியை நானும், கணரூபனும் ஆரம்பித்தோம். அவர் மொரட்டுவப் பல்கலைக்கழக மாணவர். இப்பொழுதுதான் தன் பொறியியற்படிப்பை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இரண்டு பேருமே கதை ஒளியை இதுவரை வழிப்படுத்தி வருகிறோம். அதில் பலரும் கதை சொல்கிறார்கள். இன்னும் பலரைச் சொல்ல வைப்போம்.
கதைசொல்லடா தமிழா, கதை ஒளி இரண்டுமே உண்மையில், ஈழத்துத் திரைப்படச் செயற்பாட்டுக்கான மூலோபாயம் சார்ந்த விடயங்கள்தான். இவற்றுக்கு சமூக, இலக்கிய மற்றும் எமது மக்களின் உளவியல் சார்ந்த நோக்கங்களும் இருக்கின்றன. ஆனால், இதன் பிரதான தொழிற்பாடு ஈழத்துத் தமிழ்ச் சினிமாவுக்கான சில அடிப்படை விடயங்களைக் கட்டமைப்பதாகும். அந்தவகையில், இதனை ஒரு உத்தி என்று சொல்லலாம்.
கதைசொல்லடா தமிழாவை எடுத்தால் ஈழத்துத் திரைப்படங்களுக்கான ஒரு கதை வங்கியை உருவாக்குவதற்கான உத்தியாக இதைப் பார்க்கிறேன். எங்களிடம் அள்ளுகொள்ளையாக இருக்க வேண்டியவை கேமராக்களோ, எடிட்டிங் உபகரணங்களோ அல்லது அனிமேஷன் வசதிகளோ அல்ல. இவை எல்லாவற்றையும் வாங்கி விடலாம். நடிகர்கள் கூடப் பிரச்சினை இல்லை. நிறையப்பேர் தயாராக உள்ளார்கள். பயிற்சிகள் மூலம் அவர்களை உருவாக்கி விடலாம். ஆனால், நினைத்தவுடன் உருவாக்கவோ, வாங்கவோ முடியாதது கதைகள்தான். ஈழத்துச் சினிமா முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அதற்கு இணையாக அல்லது அதைவிட வேகமாகக் கதைகளை உருவாக்கும் பண்பாடு ஒன்று செயற்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அது தொடர்ந்து செயற்படுவதற்கான சில பொறிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கதை சொல்லடா தமிழா அத்தகைய ஒரு பொறிமுறை.
கதை சொல்லல் அல்லது கதை எழுதுதல் பண்பாடு ஓரிரு எழுத்தாளர்களுடனும், அவற்றை வாசிக்கும் ஓரிரு புத்திஜீவிகளுடனும் நின்றுவிடக் கூடாது. எங்கள் சமூகமே ஒரு கதைசொல்லல் சமூகமாக மாற வேண்டும். அது முடியும். ஏனெனில், எங்கள் எல்லோரிடமும் நிறையக் கதைகள் உள்ளன. அவை எமது சிறுகதைகள், நாவல்களை விட யதார்த்தமானவை. நேர்மையானவை. எளிமையானவை. திரைப்பட வடிவத்துக்குக் கூடப் பொருத்தமானவை. அந்தக் கதைகளைச் சாதாரண மக்களிடம் இருந்து வெளிக்கொணர எமக்குப் பல பொறிமுறைகள் தேவைப்படுகின்றன. கதைசொல்லடா தமிழா இணையப் பாவனையாளர்களை இலக்காகக் கொண்ட அத்தகைய ஒரு பொறிமுறை.
கதை ஒளி, வாய்மொழிக் கதைசொல்லலை ஊக்குவிக்கும் ஒரு பொறிமுறை. இதன் முதன்மையான நோக்கம், ஈழத்தில் நிலவிவரும் பல்வேறு வட்டாரப் பேச்சுத் தமிழை எமது மக்களுக்குக் கட்புல ஊடகம் மூலம் பழக்கப்படுத்துதல் ஆகும். அந்தவகையில், கதை ஒளியின் முக்கிய அம்சம், ஈழத்து வட்டாரப் பேச்சு வழக்குகளில் மட்டும் கதைசொல்லல் ஆகும். மேடைத் தமிழையோ, இந்திய ஊடகத் தமிழையோ பயன்படுத்துவது அல்ல. இதன்மூலம், திரைப்படங்களில் எமது வட்டாரப் பேச்சுவழக்கைக் கேட்கவும், இரசிக்கவும் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறோம்.
இவற்றைவிட சினிமாத்துறை சார்ந்த நிறைய விடயங்களைக் கதைசொல்லடா தமிழா மூலமும், கதை ஒளி மூலமும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். அவை மிகவும் எளிமையான முறையில் எவ்வித ஆடம்பரங்களும், விளம்பரங்களும் இல்லாமல் தானாக நடந்து கொண்டிருக்கின்றன. இணையத்தள மற்றும் முகநூல் பாவனையாளர்களின் மட்டத்தில் நடைபெற்று வரும் இவ் இரு வேலைத்திட்டங்களையும், கிராமிய மற்றும் பள்ளிக்கூட மட்டங்களில் செயற்படுத்தும் வேலையை இப்போது ஆரம்பித்துள்ளோம். இந்தச் செயற்பாட்டில் வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள்;, அல்லது அவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இருந்தால், அவர்களுடன் இணைந்து நாம் வேலை செய்யவும் தயாராக உள்ளோம்.
கேள்வி : இறுதியாக ஈழத்துத் தமிழ்ச் சினிமாவில் ஈடுபட்டு வரும் இளையவர்களுக்கு நீங்கள் என்ன புத்திமதிகளை அல்லது அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்ன என்று சொல்ல முடியுமா?
புத்திமதிகள் சொல்வதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. புத்திமதிகள் சொல்ல வேறு பலர் இருக்கின்றனர். புத்திமதி கேட்க யாரும் தயாரில்லை என்பதுதான் யதார்த்தம்;. அடுத்தது, விதிகள் என்று எதையும் சொல்ல முடியாது என நினைக்கிறேன். அப்படி ஒரு தேவை இருந்தாலும் அவற்றைச் சொல்லுமளவுக்கு நான் அதிகாரபூர்வமான ஆளும் அல்ல.
ஆனால், என்னால் பல உத்திகளைச் சொல்ல முடியும். அதாவது, சில கருவிகளை, ஈழத்துத் தமிழ்த் திரைப்படச் செயற்பாட்டாளர்களுக்குக் கொடுக்க முடியும். கருவிகளை அல்லது உத்திகளைக் கொடுப்பதையே என் அணுகுமுறையாகக் நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். இப் பேட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அத்தகைய ஒருசில உத்திகளையே சொல்லி உள்ளேன். அவை நான் அனுபவ பூர்வமாகவும், கற்றறிந்தும், மூளையை ஆழமாக அலசியும் தெரிந்து கொண்டவை. அப்படிப் பல உள்ளன. எல்லாவற்றையும் இங்கு சொல்லிவிடவும் முடியாது. அடுத்த விடயம், இந்தக் கருவிகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்கின்ற விதியும் கிடையாது. ஏனெனில், எல்லோரும் கருவிகளைப் பயன்படுத்த விரும்புவதில்லை. சில வேலைகளை இலகுவாகச் செய்யக் கைவசம் கருவிகள் இருந்தாலும் சிலருக்குக் கஷ்டப்பட்டுக் கையாலே செய்வதே பழக்கப்பட்ட விடயமாக இருக்கலாம்.
ஆனால், ஒரு விடயத்தை இறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழத்துத் தமிழ்ச் சினிமாச் செயற்பாடுகளைப் பலமான இரண்டு சினிமாத் துறைகள் வலு உன்னிப்பாக அவதானித்த வண்ணம் உள்ளன. ஒன்று இந்தியச் சினிமாத்துறை. மற்றது சிங்களச் சினிமாத்துறை. இவை இரண்டுக்கும் நடுவில்தான் நாம் எமது முயற்சிகளைச் செய்து வருகின்றோம். இந்த இரண்டு சினிமாத் துறைகளும் வௌ;வேறு வகையை, பாரம்பரியத்தைச் சேர்ந்தவை ஆயினும், இந்த இரு சாராரும் பலமான உட்கட்டுமானத்தைக் கொண்டவர்கள்.
நாம் ஆழமான சிந்தனை மற்றும் மூலோபாய ரீதியிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காது தொடர்ந்து வெட்டினம், கவிட்டம் என்று செயற்பட்டுக் கொண்டிருந்தால் இந்த இரண்டு சாராரில் யாராவது ஒருவர் கைவசம் ஈழத்துத் தமிழ்ச் சினிமா சென்றடையும் அபாயம் உள்ளது.
சின்ன வயதில், நாம் அம்மாவிடம் காசு வாங்கிப் பக்கத்துத் தெருவுக்குப் போய் மிட்டாய், கச்சான், கடலை எல்லாம் வாங்கி வந்து எங்கள் வீட்டு முன்னால் ஒரு விளையாட்டுக் கடையைப் போட்டு நண்பர்கள், அக்கா, தங்கையிடம் வியாபாரம் செய்வோம். வாங்கின விலைக்கே விற்போம். தெருவால் போற ஆச்சி ஒராள் உண்மையாகவே கடை என்று நினைச்சு வெத்திலைக் கூறு ஒன்று கேட்பா. நாங்களும் ஆர்வக் கோளாறில், காசை வாங்கிக் கொண்டு ஓடிப்போய் பக்கத்துத் தெருவில உள்ள கடையிலை வாங்கி வந்து ஆச்சியிடம் கொடுப்பம். இப்படியே போற, வாற ஆக்கள் சாமான் கேக்கத் தொடங்கி விடுவார்கள். நாங்களும் இலாபமில்லாத அதே வேலையைச் செய்வம். படிப்படியாக ஒரு வர்த்தகச் சூழல் அங்கை வந்துவிடும். எங்களுக்கு அது விளையாட்டு. இதைப் பார்த்த பக்கத்துவீட்டு மாமா “ஆஹா! இதிலை கடை போட்டால் நல்லா இருக்குமே” என்று உண்மையாகவே ஒரு கடையை அதிலே போட்டிடுவார் அல்லது பக்கத்துத் தெருக்கடைக்காரரே அங்கே கிளையைத் தொடங்கிவிடுவார். பிறகு நாங்கள் ஓரமா ஒதுங்க வேண்டியதுதான்.
அந்த நிலைமை இப்போது ஈழத்துத் தமிழ்ச் சினிமா முயற்சியில் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வராமற் பார்க்க வேண்டும். இப்போது ஈழத்துத் திரைப்படங்கள் சார்ந்து செய்யும் வேலைகள், ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களுக்கான கேள்வி (டிமாண்ட்) ஒன்று இருப்பதை வலியுறுத்தும் பட்சத்தில், இந்தியப் படைப்பாளிகளோ அல்லது சிங்களப் படைப்பாளிகளோ இதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே பார்ப்பார்கள். நினைத்தவுடன் ஒரு சினிமாவைத் தயாரிக்கக் கூடிய வசதிகளும் பின்புலமும் அவர்களுக்கு உண்டு. திரைக்கதையே இல்லாமல் ஒரு படத்தைச் செய்யக் கூடியவர்கள். அதற்கான வசதிகள், வாய்ப்புகள் அவர்களிடம் உள்ளது. இந்தியப் படைப்பாளிகளை அழைத்துவந்து சினிமாத் தயாரிப்புக்களை இங்கு மேற்கொள்ளும் வேலைகள் எற்கெனவே அரம்பிக்கப்பட்டு விட்டன. அதற்கான ஏஜெண்டுகள் சிலர் இங்கும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று சிங்களப் படைப்பாளிளால்தான் எமது கதைகளைச் சிறப்பாகச் செய்யமுடியும் என்ற ஒரு கருத்தை இன்னொரு புறம் நிலவி வருகிறது. சிங்களச் சினிமாக்களில் இருந்துதான் எமக்கான தனித்துவத்தை நாம் உருவாக்க முடியும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். கடைசியில் கறையான்கள் ஓடியாடி கஷ்டப்பட்டு புற்றெடுக்கப் பாம்புகள் வந்து குடியேறின கதையாக ஆகிவிடக்கூடும்.
அந்த வகையில், இப்பொழுது மிக அவசியமானதும், அவசரமானதும், காத்திரமானதுமான விடயம், ஈழத்துத் தமிழ்ச் சினிமாச் சூழலில் பலமான சினிமா இயக்கங்களை உருவாக்குவதன் மூலம் ஈழத்துத் தமிழ்ச் சினிமாச் செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்கள், கருத்துப் பகிர்வுகள், ஆழமான சிந்தனைகள், திறன் பகிர்வுகளைச் செய்வதும், ஈழத்துத் தமிழ் சினிமாவுக்கான மூலோபாய ரீதியிலான அணுகுமுறையை வரையறை செய்வதும், அதனடிப்படையில் மதி நுட்பத்துடனும், சமூகப் பொறுப்புடனும் செயற்படுவதும் ஆகும்.

நன்றி
Varodayan Kanaganayagam
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment