"இளமை புதுமை"மிகச்சிறப்பாக நடந்தேறியுள்ளது

சுவிஸ் ஒன்சிங்கென் நகரில்  தமிழிதழ் ஊடக ஆதரவில் Swiss Rhythams மற்றும்  ATunes இணைந்து வழங்கிய "இளமை புதுமை"(Young & Fresh - Tamil Emerging Artist Show) வளர்ந்துவரும் வளர்ந்துவரும் கலைஞர்களின் மாபெரும் கலைநிகழ்வு 14.12.2013 மிகச்சிறப்பாக  நடந்தேறியுள்ளது 
ஐரோப்பிய முன்னணி நடனக்குழுக்கள், இசைகலைஞர்கள், நகைச்சுவைகலைஞர்கள், நாடகக் குழுக்கள் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்தனர். இளையோர்களின் புதியதொருமுயர்சி வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு  எம்மவர்மத்தியில் கிடைத்த ஆதரவை நிகழ்வு மன்றமே பறைசாற்றி இருந்தது. தென்னிந்திய சினிமாவில் நடிப்புத்துறையில் களம்புகுந்திருக்கும் இலங்கை கலைஞர்களான நடிகர் மற்றும் இலண்டன் வெற்றி வானொலி அறிவிப்பாளர் ஜே ஜே, TamiLOL டயான்  மற்றும் சுவிஸ் ரகு ஆகியோரினால்  நிகழ்வுகள் மிகச்சிறப்பாக தொகுத்துவளங்கப்பட்டது.

இலங்கை சக்தி வானொலியின் அறிவிப்பாளர் கஜன் அவர்களின் தொகுப்பில் "தமிழிதழ்" தயாரிப்பில் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான புத்தம்புதிய பாடல்கள் உள்ளடங்கிய "இளமை புதுமை" இசைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. மாலை ஆறு  மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த நிகழ்வு, பல்கிப்பெருகிய மக்கள் தொகையின் காரணமாக ஒருமணிநேரம் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது. எண்ணூறுக்கும் அதிகமான மக்கள் திரண்டு இரண்டடுக்கு மாளிகையின் ஆசனங்களையும் நிறைத்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்த நேரம் முதல் மிகவும் சிறப்பாகவும் சுவாரஸ்சியமாகவும் தொடர்ந்தது. பல்வேறு தரப்பட்ட இசைநடனக்குழுக்கள் பங்கேற்றமையும் வெவ்வேறு தன்மைகள் பொருந்திய நடனங்கள் மேடையேறியமையும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதாக இருந்தது. அதிலும் நடனக்கலை ஆர்வம் காரணமாக எம்மகக்கலைஞர்கள் தவிர ஐரோப்பியர்களை மாத்திரம் கொண்ட ஒரு நடனக்குழு தமிழ் பாடல்களுக்கு அசத்தல் நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

நிகழ்ச்சியின் இன்னொரு அங்கமாக, உலகெங்கும் பரந்து வாழும் இளந்தமிழ்க்கலைஞர்களின்  தயாரிப்பில் உருவான பாடல்கள், தமிழிதழ் குழுமத்தினரால் தொகுக்கப்பட்டு ஒரு இறுவட்டாக வெளியிடப்பட்டது. பதினைந்து பாடல்களைக்கொண்ட இந்த 'இளமை புதுமை' இறுவட்டின் முதல் பிரதியை தமிழிதழ் குழுமம் வழங்க; 'Solo movies'  நிறுவுனர் வசி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக சுவிஸ் வாழ் வர்த்தகப்பிரமுகர்களும் சுவிஸ் வாழ் பிரபல கலைஞர்களும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையிடையே Swiss Rhythams குழுவினரின் நெறியாள்கையில் சிறப்பான முறையில் இசைக்கச்சேரியானது  பகுதி பகுதியாக வழங்கப்பட்டது. இவ்விசைக்கச்சேரியின் மொத்தத்தொகுப்பானது இந் நிகழ்ச்சிக்கு ஒரு மெருகூட்டும் அம்சமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி   தமிழ்   இதழ்   

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles